''அருமையான என்ட்ரியோட வரேன்'' - வீடியோ மூலம் வடிவேலு அதிரடி

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் சினிமாவில் பிரபல காமெடி நடிகராக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரையும் சிரிக்க வைத்துக்கொண்டிருப்பவர் வடிவேலு. சமீபத்தில் பிரெண்ட்ஸ் படத்தில் இவர் நடித்த காண்டிராக்டர் நேசமணி என்ற வேடம் இந்திய அளவில் டிரெண்டானது.

Vadivelu opens up about his next plan and his Birthday

வட இந்தியர்கள் கூட யார் அந்த நேசமணி என்று குழப்பத்தில் விழி பிதுங்கி நின்றனர். இந்நிலையில் சன் டிவி தனது ட்விட்டர் பக்கத்தில் வடிவேலு பேசும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.

அந்த வீடியோவில், ''என்னுடைய பிறந்த நாள் செப்டம்பர் 12. அதனை மகிழ்ச்சியுடன் தெரியப்படுத்திய சன் டிவிக்கு மிகுந்த நன்றி. என்னை பெற்றெடுத்த தாய்க்கு நன்றி.

இவ்வளவு விஷயங்களுக்கும் காரணமானது மக்கள் சக்தி தான். ஏன் இவ்ளோ நாள் நடிக்காம இருக்காருனு கேட்பிங்க. சீக்கிரம் செப்டம்பர் முடியறதுக்குள்ள அருமையான எண்ட்ரியோட வருவேன்.  வாழ்க்கைனா சைத்தான், சனியன் இருக்கத்தான் செய்யும். எல்லோர் வாழ்க்கையில் இருக்கும்'' என்றார்.