ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் புதிய படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் பற்றிய தகவல்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

அபிஷேக் பிலிம்ஸ் சார்பாக ரமேஷ் பி.பிள்ளை தயாரித்து சித்தார்த், ஜி.வி.பிரகாஷ் இணைந்து நடித்து வெளியான படம் 'சிவப்பு மஞ்சள் பச்சை'. 'பிச்சைக்காரன்' படத்துக்கு பிறகு இயக்குநர் சசி இந்த படத்தை இயக்கியுள்ளார்.

GV Prakash Kumar's next first look detail after Sivappu Manjal Pachai

இந்த படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதனயைடுத்து ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் படம் குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது. புதுமுக இயக்குநர் சதிஷ் செல்வகுமார் இயக்கும் ஒரு படத்தில் அவர் நடிக்கவிருக்கிறார்.

இந்த படத்தை Axess Film Factory நிறுவனத்தின் சார்பாக டில்லி பாபு தயாரிக்கவிருக்கிறார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் செப்டம்பர் 11 ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று கூறப்படுகிறது.

இதுகுறத்து ஜி.வி.பிரகாஷ் எழுதியுள்ள ட்விட்டர் பதிவில், புதிய தொடக்கம் இதோ. அழகான கதை மறறும் நல்ல தயாரிப்பாளரான அக்ஸெஸ் ஃபிலிம் ஃபேக்டரி... உண்மயிலேயே ஸ்பெஷலான ஒருவர் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடுவார். என்று குறிப்பிட்டுள்ளார்.