பிரபல ஹீரோ படத்தில் வில்லனாக நடிக்கும் கௌதம் மேனன்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இயக்குநர் சசி இயக்கத்தில் சித்தார்த் - ஜி.வி.பிரகாஷ் நடித்து கடந்த வாரம் வெளியான படம் சிவப்பு மஞ்சள் பச்சை. அபிஷேக் ஃபிலிம்ஸ் சார்பாக ரமேஷ் பி.பிள்ளை இந்த படத்தை தயாரித்துள்ளார். இந்த படம் தற்போது ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது.

Gautham Vasudev Menon plays Baddie in GV Prakash, Varsha Bollamma's next

இதனையடுத்து ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் படத்தின் பூஜை சமீபத்தில் நடைபெற்றது. கே புரொடக்ஷன் சார்பாக ராஜராஜன் இந்த படத்தை தயாரிக்கிறார். இந்த படத்தில் ஜி.வி.பிரகாஷிற்கு ஜோடியாக வர்ஷா பொல்லம்மா நடிக்கிறார்.

ஜி.வி.பிரகாஷ் கல்லூரி மாணவனாக நடிக்கும் இந்த படத்தை வெற்றி மாறனிடம் உதவி இயக்குநராக இருந்த மதிமாறன் இந்த படத்தை இயக்குகிறார். இந்த படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க, விஷ்ணு ரங்கசாமி இந்த படத்துக்கு ஒளிப்பதிவு செய்யவிருக்கிறார். இந்த படத்தில் இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் எதிர்மறை வேடத்தில் நடிக்கிறார்.