‘இந்த தொழில் என்னை மாற்றியது...’ - 10 ஆண்டுகளை கடந்த ஸ்ருதிஹாசன் நெகிழ்ச்சி!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

உலகநாயகன் கமல்ஹாசனின் மூத்த மகளும், நடிகையுமான ஸ்ருதிஹாசன் திரைத்துறையில் அறிமுகமாகி 10 ஆண்டுகள் கடந்ததை ஸ்ருதி தனது ட்விட்டர் பக்கத்தில் மகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.

Shruti Haasan completed 10 years in movie business, that changed her as an actor and person

பாலிவுட்டில் கடந்த 200ம் ஆண்டு வெளியான ‘லக்’ திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் ஸ்ருதிஹாசன். அதைத் தொடர்ந்து தெலுங்கு, தமிழ் மொழி படங்களில் முன்னணி கதாநாயகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்தார். இந்நிலையில், திரைத்துறையில் இன்றுடன் 10 ஆண்டுகளை நிறைவு செய்தது குறித்து நடிகை ஸ்ருதிஹாசன் ட்விட்டரில் தனது மகிழ்ச்சியை பகிர்ந்துள்ளார்.

இது குறித்து அவர் தனது ட்வீட்டில், ‘இன்று திரையுலகில் நடிகையாக 10 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கிறேன். திரைப்பட தொழில் மூலம் பல விஷயங்களை கற்றுக் கொண்டேன், அதற்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் நன்றி. இந்த நாளை மிகவும் மகிழ்ச்சியாக, நன்றியுடன் உணர்கிறேன். இன்னும் கடுமையாக உழைப்பேன் என சத்தியம் செய்கிறேன்’.

‘எனக்கு ஆதரவாக இருந்த அனைவரையும் பெருமைப்பட வைப்பேன். சினிமா தொழில் ஒரு குடும்பம், இங்கு நல்லது, கெட்டது என அனைத்தும் நடக்கும். அனைவருக்கும் அதனை வளர்க்க வேண்டும் என்ற நோக்கமும், ஆஅர்வமும் உள்ளது. ஒரு நடிகையாக, ஒரு மனிதனாக நிறைய மாற்றிக் கொண்டிருக்கிறேன். ஒரு வருடம் இடைவெளிக்கு பிறகு மீண்டும் என்னை நானே சுய மதிப்பீடு செய்யவும், எனது தொழில் என்ன லட்சியத்துடன் இருக்க வேண்டும் என்பதையும் கற்றிக் கொடுத்து உதவியாக இருந்தது’.

‘இந்த பகுதி என்னை உற்சாகப்படுத்துகிறது. என் மீது நம்பிக்கையும், அளவுகடந்த அன்பையும் வைத்திருக்கும் அனைர்வருக்கும் நன்றி. இது எனக்கு எந்த அளவிற்கு அர்த்தம் கொடுத்திருக்கிறது என்பதை உங்களால் புரிந்துக் கொள்ள முடியாது. என் இதயத்தின் ஆழத்தில் இருந்து உங்கள் அனைவருக்கும் நன்றி’ என குறிப்பிட்டுள்ளார்.

ஸ்ருதிஹாசனின் இந்த பதிவை தொடர்ந்து சமூக வலைதளங்களில் அவரது ரசிகர்களும், திரை பிரபலங்களும் தங்களது வாழ்த்துக்களை பதிவிட்டு வருகின்றனர். தற்போது இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்து வரும் ‘லாபம்’ திரைப்படத்தின் மூலம் நடிகை ஸ்ருதிஹாசன் தமிழ் சினிமாவில் ரீ-எண்ட்ரி கொடுத்திருக்கிறார்.