www.garudabazaar.com

ஆரியின் ரசிகர்களை கவர்ந்த ஷிவானியின் அம்மா... "நீங்க சொன்னது 100% உண்மை".. குஷியில் ரசிகர்கள்.!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் நிகழ்ச்சி பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் இன்று 86வது நாளை கடந்து வெற்றிகரமாக இறுதிப் பயணத்தை போட்டியாளர்கள் மேற்கொண்டுள்ளனர். இந்நிலையில் ஒவ்வொரு சீசனிலும் இறுதியாக நடைபெறும் Freeze டாஸ்க்கிற்காக ரசிகர்கள் காத்திருப்பது வழக்கம். அந்த வகையில் இன்று இந்த சீசனுக்கான Freeze டாஸ்க்  துவங்குகிறது. முதல் ஆளாக ஷிவானியின் தாயார் பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்தார்.

shivani mom gain respect among aari fans ரசிகர்களை கவர்ந்த ஷிவானியின் அம்மா

அவர் ஷிவானியின் மீது கடுமையான கோபத்தில் இருந்தார் என்பது அவர் பேசிய வார்த்தைகளிலேயே தெரிந்தது. மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் தனது மகளை பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு அனுப்பி வைத்து ஏமாற்றும் அடைந்ததையும் பார்க்க முடிந்தது.  இந்நிலையில் ஷிவானியின் அம்மா ஆரியை பார்க்கும் பொழுது "நீங்கள் மிகவும் சிறப்பாக விளையாடுகிறீர்கள் மென்மேலும் இப்படியே உயரங்கள்" என்பதுபோல வாழ்த்து தெரிவித்தார். அவர் மேலும் ஷிவானியிடம் கூறும்போது கூட ஆரியை பற்றி தவறாக நினைத்துக் கொண்டிருக்கிறாய் அவர் உன் நல்லதுக்காக தான் கூறுகிறா" என்பது போல அதிரடியாக பேசினார். இதனை பார்த்த ஆரி ரசிகர்கள் ஷிவானியின் அம்மாவும்  ஆரி பேன் தான் போல என்று அவரைக் கொண்டாட ஆரம்பித்துவிட்டனர். மேலும் அவர் ஆரியை பற்றி கூறுவது 100% உண்மை என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறதை காணமுடிகிறது

Tags : Shivani, Aaari

தொடர்புடைய இணைப்புகள்

shivani mom gain respect among aari fans ரசிகர்களை கவர்ந்த ஷிவானியின் அம்மா

People looking for online information on Aaari, Shivani will find this news story useful.