www.garudabazaar.com

சோம்மின் வளர்ப்பு நாய்க்கு ஏற்பட்ட சோகம்... இது தெரிந்தால் நிச்சயம் அவர் உடைந்து போவார்..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் நிகழ்ச்சி பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒரு சிறந்த மனிதராக பலரது இதயங்களை பிடித்திருப்பவர் சோம். அவரது வளர்க்கும் செல்ல நாய் குட்டு பற்றி நம் அனைவருக்கும் தெரியும். காரணம்  அவர் பல இடங்களில் குட்டு வை பற்றி பேசியிருக்கிறார். கடிதம் எழுதச் சொன்னபோது கூட அவர் குட்டுவுக்கு தான் கடிதம் எழுதினார்.

som dog died leaves fans in shock சோம்மின் வளர்ப்பு நாய்க்கு ஏற்பட்ட சோகம்

இந்நிலையில் சமீபத்தில் கிறிஸ்துமஸ் பரிசுகள் வந்த போதும் அவர் குட்டு மற்றும் அதன் குட்டிகளுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தனது நண்பர்களுக்கு மகிழ்ச்சியுடன் காட்டிக்கொண்டிருந்தார். இந்நிலையில் சோகமான செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது குட்டுவின் மகனான ரோனி தற்போது மரணம் அடைந்துள்ளது. இந்த செய்தி அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இது தெரிந்தால் சோம் மனதளவில் நிச்சயம் உடைந்து போவார் என்பது உறுதி. காரணம் செல்லப் பிராணிகளின் மரணம் ஒருவருக்கு எந்த அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பது அவற்றை பெற்றிருப்பவர்களுக்கு மட்டுமே தெரியும் என்பது நிதர்சனமான உண்மை.

சோம்மின் வளர்ப்பு நாய்க்கு ஏற்பட்ட சோகம்... இது தெரிந்தால் நிச்சயம் அவர் உடைந்து போவார்..! வீடியோ

som dog died leaves fans in shock சோம்மின் வளர்ப்பு நாய்க்கு ஏற்பட்ட சோகம்

People looking for online information on Biggboss4tamil, Som will find this news story useful.