www.garudabazaar.com

மௌன ராகம் சக்தி அடுத்து நடிக்க போகும் பிரமாண்ட சீரியல்... டிரெய்லர் வெளியிட்ட விஜய் டிவி..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவியில் கடந்த 3 ஆண்டுகளாக ஒளிபரப்பாகி நல்ல ஹிட்டடித்த சீரியல் மௌனராகம். இந்த சீரியல் கடந்த செப்டம்பர் மாதம் முடிவடைந்தது. மேலும் இந்த சீரியலின் அடுத்த பாகம் சீக்கிரமே வெளியாகப் போகிறது என்று அறிவிப்பு வெளியானது. இந்நிலையில் ராட்சசன் படத்தில் குழந்தை வேடத்தில் நடித்த ரவீனா தான் அதில் சக்தியாக நடிக்கப் போகிறார் என்றும் தெரியவந்தது.

சக்தி அடுத்து நடிக்க போகும் சீரியல் mouna raagam sakthi to paly lead in this new serial

மௌன ராகம் சீரியலை தாங்கிப் பிடித்தது சக்தி என்ற கதாபாத்திரத்தில் நடித்த கிருத்திகா தான் என்பது அனைவரும் அறிந்த விஷயம். இந்நிலையில் குழந்தை நட்சத்திரமான கிருத்திகாவை வைத்து ஒரு மெகா சீரியலை விஜய் டிவி உருவாக்கியுள்ளது. பழங்காலத்தில் நடப்பது போன்ற பிரமாண்ட கதையில் ஒரு பெண் நாட்டை ஆண்ட கதையாக இது உருவாக்கியுள்ளது. அதுவும் பெண் குழந்தைகளை வெறுக்கும் ராஜாவின் மனதை இளவரசி எப்படி கவர போகிறாள் என்பது தான் கதையின் கரு போல. மௌன ராகம் சீரியலிலும் கிட்டத்தட்ட இதே ஒன் லைன் என்பதால் கிருத்திகா வெளுத்து வாங்குவார் எனபதால் எந்த சந்தேகமும் இல்லை. மேலும் இந்த சீரியலுக்கு மௌன ராகம் வேலன் என்பதை தழுவி 'வேலம்மாள்' என்று பெயரிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மௌன ராகம் சக்தி அடுத்து நடிக்க போகும் பிரமாண்ட சீரியல்... டிரெய்லர் வெளியிட்ட விஜய் டிவி..! வீடியோ

Tags : Vijay tv

தொடர்புடைய இணைப்புகள்

சக்தி அடுத்து நடிக்க போகும் சீரியல் mouna raagam sakthi to paly lead in this new serial

People looking for online information on Vijay tv will find this news story useful.