www.garudabazaar.com

'விளையாட்ட கெடுக்குறீங்க' மீண்டும் தொடங்கிய பஞ்சாயத்து... 'மன்னிப்பு' கேட்ட பாலா!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நேற்று முன்தினம் டாஸ்க்கின் மீதி இன்று ஒளிபரப்பானது. இதில் ஒரு முறைதான் பிக்பாஸ் பந்து போட்டார். அதை இரண்டு அணிகளும் பிடிக்க முயன்று கடைசியில் சோம் அணியினர் பந்தை கைப்பற்றினர். இதைப்பார்த்த பாலாஜி விளையாட்டை கெடுக்குறீங்க என ஷிவானியிடம் கடுப்பாக சொல்ல, அவர் பதிலுக்கு என்ன பார்த்து எப்படி நீங்க சொல்லலாம் என கேள்வி எழுப்பினார்.

Balaji Murugadoss Apologized to Shivani Narayanan

இதனால் இருவரும் முட்டி மோதிக்கொண்டனர். (இந்த ஒரு காட்சிக்காக தான் பிக்பாஸ் இதை ஒளிபரப்பினார் போல) தொடர்ந்து ஆரி, அனிதா, ஆஜீத் ஆகியோர் சமாதானம் பேசியும் கூட இந்த பஞ்சாயத்து தீரவில்லை. பாலாஜி பிடித்த சிவப்பு பந்து காரணமாக அவரின் மொத்த டீம் மதிப்பெண்ணும் ஜீரோ ஆனதும் ஷிவானி சண்டை போட்டதற்கு காரணமாக இருக்கலாம். இருவரும் ஒருவருக்கு ஒருவர் சளைக்காமல் பேசினர்.

பாலாஜி கடைசியில் கையெடுத்து கும்பிட்டு மன்னிப்பு கேட்க, ஷிவானி அழுதுகொண்டே உள்ளே சென்று விட்டார். பாத்ரூமுக்குள் சென்றும் அவர் அழுததை கேமரா குளோஸ் அப்பில் காட்டியது. தொடர்ந்து சோம் பண்ண மிஸ்டேக்னால தான் நீங்க பந்தை கேட்ச் பிடிக்கலையா என மீண்டும் ஒருமுறை வாரினார். ஆனாலும் ஷிவானி இந்த சண்டைகளை எல்லாம் மறந்து நம்பர் டாஸ்க்கில் பாலாவுக்கு ஓட்டு போட்டது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய இணைப்புகள்

Balaji Murugadoss Apologized to Shivani Narayanan

People looking for online information on Bigg Boss 4 Tamil will find this news story useful.