www.garudabazaar.com

"மிக்க நன்றி நண்பா, இதனால தான் நீங்க தளபதி".. தமிழில் தெறிக்கும் ஷாருக்கானின் ட்வீட்!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தனது நடிப்பில் அடுத்து வெளிவர உள்ள பதான் திரைப்படத்தின் டிரெய்லரை வெளியிட்ட நடிகர் விஜய்யை  குறிப்பிட்டு நடிகர் ஷாருக் கான் செய்துள்ள ட்வீட், தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.

Shah rukh khan thanks vijay for pathaan trailer release

Also Read | "வனிதா அக்காவுக்காக Waiting, அவங்க பேசுறப்போ Counter குடுக்கணும்".. அசிம் சொன்னதும் பதறிய அமுது

பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக் கானுக்கு இந்தியா மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் பரவலாக ரசிகர்கள் உள்ளனர். ஷாருக்கான் கடந்த சில ஆண்டுகள் படங்களில் நடிக்காமல் இருந்து வந்தார். இதனைத் தொடர்ந்து அட்லி இயக்கத்தில் அடுத்த படத்தில் (ஜவான்) நடிக்க ஒப்பந்தமானார். அதே போல் ராஜ்குமார் ஹிரானியுடன் (டங்கி) ஒரு படமும் கமிட் ஆனார்.

இந்த படங்களுக்கு முன்பே இந்தியில் ஹிர்திக் ரோஷன் நடிப்பில் வெளியாகி ப்ளாக்பஸ்டர் ஆன 'வார்' படத்தின் இயக்குனர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் 'பதான்' படத்தில் நடிக்க கமிட் ஆனார். இப்படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடிகை தீபிகா படுகோனே நடிக்கிறார். மேலும் பிரபல பாலிவுட் நடிகர் ஜான் ஆபிரஹாம் முக்கிய ரோலில் நடிக்கிறார். யாஷ் ராஜ் பிலிம்ஸின் 50 வது படமாக பதான் உருவாகி உள்ளது.

Shah rukh khan thanks vijay for pathaan trailer release

பதான் திரைப்படம், பான் இந்தியன் படமாக தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும், வரும் ஜனவரி 25 ஆம் தேதியன்று திரை அரங்குகளில் வெளியாக உள்ளது. இதனைத் தொடர்ந்து, பதான் படத்தின் டிரெய்லர் இன்று வெளியாகி இருந்தது. தமிழில் இப்படத்தின் டிரெய்லரை நடிகர் விஜய் வெளியிட்டிருந்தார். இது குறித்து விஜய் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில்,"பதான் படத்துக்காக ஷாருக்கான் சார் மற்றும் படக்குழுவிற்கு வாழ்த்துக்கள்" என குறிப்பிட்டு பதான் டிரெய்லரை வெளியிட்டிருந்தார்.

Shah rukh khan thanks vijay for pathaan trailer release

இந்த நிலையில், பதான் படத்தின் தமிழ் டிரெய்லரை வெளியிட்ட நடிகர் விஜய்க்கு நன்றி சொல்லி ஷாருக் கான் குறிப்பிட்டு செய்த ட்வீட் தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.

Shah rukh khan thanks vijay for pathaan trailer release

இது தொடர்பாக ஷாருக் கான் பகிர்ந்த ட்வீட்டில், "மிக்க நன்றி நண்பா, இதனால தான் நீங்க தளபதி. கூடிய விரைவில் ஒரு அருமையான விருந்தில் சந்திப்போம். லவ் யூ" என தமிழ் மற்றும் ஆங்கிலம் என இரண்டிலும் குறிப்பிட்டுள்ளார். சமீபத்தில் கூட நடிகர்கள் ஷாருக் கான், விஜய் மற்றும் இயக்குனர் அட்லி ஆகியோர் சந்தித்திருந்த புகைப்படங்கள் இணையத்தில் அதிகம் வைரலாகி இருந்ததும் குறிப்பிடத்தக்கது.

Also Read | தன்னை நாமினேட் செய்த விக்ரமனிடம் நன்றி சொன்ன அசிம்.. நெகிழ்ச்சி பின்னணி!!.. Bigg Boss!!

தொடர்புடைய இணைப்புகள்

Shah rukh khan thanks vijay for pathaan trailer release

People looking for online information on Pathaan, Pathaan trailer, Shah Rukh Khan, Vijay will find this news story useful.