www.garudabazaar.com

"அந்த பாட்டுக்கு தான் காலையில டான்ஸ் ஆடுனேன்".. RRR குறித்து ஷாருக் போட்ட ட்வீட்!!.. Trending!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

RRR திரைப்படம் பல மொழிகளில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் (25.03.2022) உலகம் முழுவதும் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றது.

Shah rukh khan tweets about Naatu naatu song win golden globe awards

Also Read | "கையிலே ஆகாசம்".. கண்ணீர் விட்டு கலங்கிய தமன்.. எமோஷனல் ஆன வாரிசு படக்குழு!!

ராம்சரண், ஜூனியர் NTR கதாநாயகர்களாக நடிக்க, இவர்களுடன் அஜய் தேவ்கன், ஆலியா பட், சமுத்திரக்கனி ஆகியோர் முன்னனி கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் வெவ்வேறு காலகட்டங்களில் வாழ்ந்த தெலுங்கு சுதந்திர போராட்ட வீரர்களான அல்லூரி சீதாராம ராஜீ மற்றும் கொமரம் பீம் ஆகியோரின் வாழ்க்கையை தழுவி கற்பனையாக இந்த படம் உருவாகியது.

இந்த படத்தில் ராம் சரண், அல்லூரி சீதாராம ராஜுவாக நடித்துள்ளார். ஆந்திராவை சேர்ந்த அல்லூரி சீதாராம ராஜு சுதந்திரத்திற்காக ஆங்கிலேயர்களை எதிர்த்து போராடியவர் ஆவார். ஜூனியர் என்டிஆர், கொமரம் பீம் ஆக நடித்துள்ளார். கொமரம் பீம் ஹைதராபாத் நிஜாம்கள் மற்றும் வெள்ளையர்களை எதிர்த்து போராடிய பழங்குடி இனத்தை சேர்ந்தவர் ஆவார்.

Shah rukh khan tweets about Naatu naatu song win golden globe awards

இந்த இரு பெரும் வீரர்களும் வெவ்வேறு கால கட்டத்தில் வாழ்ந்தவர்கள். இவர்கள் இருவரும் சந்தித்தால் எப்படி இருக்கும் என்ற கற்பனையே 'ஆர்ஆர்ஆர் ' படத்தின் மையக்கரு. RRR படம் உலகம் முழுவதும் 1100 கோடி ரூபாய்க்கும் மேல்  வசூலாக ஈட்டியது. ஒடிடியில் இந்த படம் வெளியான பிறகும் உலகம் முழுவதும் பெரும் வரவேற்பை பெற்றது.

கடந்த ஆண்டு அக்டோபர் 21 ஆம் தேதி இந்த படம் ஜப்பான் திரையரங்குகளில் ஜாப்பனிஷ் மொழியில் வெளியாகியது. ஐமாக்ஸ் 3டியிலும் இந்த படம் வெளியானது குறிப்பிடத்தக்கது.

Shah rukh khan tweets about Naatu naatu song win golden globe awards

இந்த திரைப்படம் கோல்டன் குளோப் விருதுக்கு இரண்டு பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டது. சிறந்த பாடல் மற்றும் சிறந்த அந்நிய நாட்டு திரைப்படம் ஆகிய இரண்டு பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டது. இதில் சிறந்த பாடலுக்கான விருதை நாட்டு நாட்டு பாடல் வென்றுள்ளது. இசையமைப்பாளர் கீரவாணி விருதை பெற்றுக் கொண்டார்.

கோல்டன் குளோப் விருது விழா அமெரிக்க நேரப்படி இன்று ஜனவரி மாதம் 10 ஆம் தேதி லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்றது. இந்த விருது விழாவில் ராஜமௌலி, ஜூனியர் என்டிஆர், அவரது மனைவி லட்சுமி ப்ரணதி  நடிகர் ராம் சரண், அவரது மனைவி உபசன்னாவும் கலந்து கொண்டனர். இந்திய மொழி படம் கோல்டன் குளோப் விருது வென்றுள்ளதை இந்திய மக்கள் மற்றும் பிரபலங்கள் அனைவரும் கொண்டாடி வருவதுடன் தங்களின் வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், இது தொடர்பாக பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக் கான் பகிர்ந்துள்ள ட்வீட் இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.

Shah rukh khan tweets about Naatu naatu song win golden globe awards

பதான் டிரெய்லர் பற்றி ராஜமௌலி பாராட்டுக்களை தெரிவித்திருந்த ட்வீட்டை பகிர்ந்த ஷாருக் கான், "சார் இப்போ தான் எழுந்து, கோல்டன் குளோப்ஸில் உங்கள் வெற்றியை கொண்டாடும் வகையில் நாட்டு நாட்டு பாட்டுக்கு நடனமாடி இருந்தேன். இன்னும் நிறைய விருதுகள் பெற்று இந்தியாவை பெருமைப்படுத்துங்கள்" என நெகிழ்ச்சியுடன் ஷாருக் கான் குறிப்பிட்டுள்ளார்.

Also Read | "வனிதா வந்தா அன்பால கட்டி போடுவோம்".. விக்ரமன் சொன்ன Points.. ஹவுஸ்மேட்ஸ் ரியாக்ஷன் இதுதான்

Shah rukh khan tweets about Naatu naatu song win golden globe awards

People looking for online information on Golden Globe Awards, Jr ntr, Naatu Naatu Song, Ram Charan, RRR, Shah Rukh Khan, Shah rukh khan Tweet, SS Rajamouli will find this news story useful.