'இந்தியன் 2' ஷூட்டிங்கிலிருந்து மெட்ரோ ரயிலில் வீடு திரும்பிய கமல்
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Sep 20, 2019 05:23 PM
ஷங்கர் இயக்கத்தில் உலக நாயகன் கமல்ஹாசன் நடித்து வரும் ‘இந்தியன் 2’ திரைப்படத்தை லைகா புரொடக்ஷன் சார்பாக, சுபாஷ்கரன் தயாரித்து வருகிறார். இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்கும் இப்படத்திற்கு, ரத்னவேலு ஒளிப்பதிவு செய்கிறார்.

இப்படத்தில் சித்தார்த், காஜல் அகர்வால், பிரியா பவானி ஷங்கர், ஐஸ்வர்யா ராஜேஷ், ரகுல் ப்ரீத், வித்யூத் ஜாம்வால், விவேக் டெல்லி கணேஷ், நெடுமுடி வேணு உள்ளிட்டோரும் நடிக்கின்றனர். 2021-ம் ஆண்டு தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஏப்ரல் 14- ம் தேதி வெளியாகும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
‘இந்தியன் 2’ படத்தின் முதற்கட்ட ஷூட்டிங் பணிகள் சென்னையில் நடைபெற்றது. அதில் ஸ்டண்ட் மாஸ்டர் பீட்டர் ஹெய்ன் வடிவமைத்த அதிரடி ஆக்ஷன் காட்சிகள் படமாக்கப்பட்டன. அதைத் தொடர்ந்து ஆந்திர மாநிலம் ராஜமுந்திரியில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
அங்கு பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ள ஜெயில் செட்-அப்பில் கமல்ஹாசன் நடித்து வருகிறார். இந்நிலையில் இந்தியன் 2 ஷூட்டிங்கை முடித்துக்கொண்டு சென்னை திரும்பிய கமல்ஹாசன், சென்னை விமான நிலையத்தில் இருந்து அவரது வீட்டிற்கு மெட்ரோ ரயிலில் பயணம் செய்தார்.