இந்த வாரம் பிக் பாஸில் இருந்து எவிக்ட் ஆவது இவரா?
முகப்பு > சினிமா செய்திகள்By Anbarashi | Sep 20, 2019 05:17 PM
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறப்போகும் போட்டியாளர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கடந்த வாரம் வனிதா பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய நிலையில், இந்த வாரம் எவிக்ஷனுக்கு கவின், லாஸ்லியா, சேரன், ஷெரின் ஆகியோர் நாமினேட் ஆகியுள்ளனர். இந்நிலையில், இந்த வாரம் டிக்கெட் டூ ஃபினாலே என்ற டாஸ்கில் போட்டியாளர்கள் கடுமையாக போட்டி போட்டு விளையாடினர்.
இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறப்போகும் போட்டியாளர்கள் குறித்த தகவல்கள் நமக்கு கிடைத்துள்ளன. சேரன், லாஸ்லியா, கவின் ஆகியோரைவிட ஷெரினுக்கு ஆதரவர்களும், ஹேட்டர்ஸ்களும் பெரிதாக இல்லாததால் இந்த வாரம் ஷெரின் வெளியேற வாய்ப்பிருப்பதாக எதிர்ப்பார்க்கப்படுகிறது.
ஆனால், இந்த வாரம் முழுவதும் நடைபெற்ற டிக்கெட் டூ ஃபினாலே டாஸ்கில் சிறப்பாக விளையாடி தர வரிசையில் முன்னணியில் இருப்பதால், ஷெரின் ஒருவேளை நேரடியாக ஃபைனல்ஸ்-க்கு செல்லும் டிக்கெட்டை பெற்றுவிட்டால், அவர் இறுதிப்போட்டிக்கு செல்லவும் வாய்ப்பிருப்பதாக தெரிகிறது. அப்படி ஷெரின் ஃபைனல்ஸ்க்கு நேரடியாக செல்லும் பட்சத்தில் இந்த வாரம் நாமினேஷனில் உள்ள சேரன், லாஸ்லியா, கவின் ஆகியோரில் யார் வெளியேறுவார்கள் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
இந்த வாரம் பிக் பாஸில் இருந்து எவிக்ட் ஆவது இவரா? வீடியோ