www.garudabazaar.com

புகழ்பெற்ற மலையாள நடிகர் இன்னசென்ட் மரணம்.. சோகத்தில் மூழ்கிய ரசிகர்கள்..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரபல மலையாள நடிகர் இன்னசென்ட் காலமானார்.

Famous Malayalam actor Innocent thekkethala passed away

Images are subject to © copyright to their respective owners.

Also Read | ஹோட்டல் அறையில் சடலமாக மீட்கப்பட்ட பிரபல நடிகை.. அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

நடிகர் இன்னசென்ட், மலையாள சினிமாவில் விட பரயும் மும்பே, இலக்கங்கள், ஒர்மைக்காயி , லோகயுடே  மரணம் ஒரு பிளாஷ்பேக் போன்ற படங்களை தயாரித்தவர். கஜகேசரியோகம், டாக்டர்  பசுபதி, ஓரிடத்து, பொன்முட்டையிடுன்ன  தாராவு, மழவில்  காவடி, ராம்ஜிராவ் ஸ்பீக்கிங், மிதுனம், லேசா லேசா  உள்ளிட்ட 750-க்கும் மேற்பட்ட படங்களில் நடிகராகவும் நடித்து மலையாள சினிமாவில் புகழ் பெற்றவர்.

அரசியலில் ஆர்வம் கொண்ட இவர், 2014-2019 சாலக்குடி நாடாளுமன்ற தொகுதியில் இடது முன்னணியின் சுயேட்சை உறுப்பினராகக் செயல்பட்டவர். கேரள சினிமா நடிகர்களின் அமைப்பான 'அம்மா'வின் தலைவராக நான்கு முறை தொடர்ந்து 12 ஆண்டுகள் பதவி வகித்தவர்.

Famous Malayalam actor Innocent thekkethala passed away

Images are subject to © copyright to their respective owners.

2012 ஆம் ஆண்டு புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, 2015 ஆம் ஆண்டில் சிகிச்சை பெற்று மீண்டு வந்தவர். தன்  புற்றுநோய் சிகிச்சை அனுபவங்களை  'கேன்சர் வார்டில் சிரி' என நூலாக எழுதியுள்ளார்.

எழுத்தாளராக, தன்னுடைய சுயசரிதை நூல், சிறுகதைத்தொகுப்பு உட்பட நான்கு நூல்களை எழுதியுள்ளார்.

இந்நிலையில் கொரோனா காரணமாக ஏற்பட்ட நுரையீரல் தொற்று காரணமாகவும் அதோடு ஏற்பட்ட உடல் உறுப்புகள் செயலிழப்பு காரணமாக இதயம் செயலிழப்பு ஏற்பட்டு கொச்சியில் உள்ள மருத்துவமனையில் உயிரிழந்தார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அவருக்கு வயது 75.

Famous Malayalam actor Innocent thekkethala passed away

Images are subject to © copyright to their respective owners.

இன்னசென்ட் மறைவுக்கு ரசிகர்கள், பிரபல நடிகர் நடிகைகள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் பலர் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

Also Read | SSMB28 : மகேஷ் பாபுவின் அடுத்த படம்.. தெறி போஸ்டருடன் வெளியான ரிலீஸ் அப்டேட்..

தொடர்புடைய இணைப்புகள்

Famous Malayalam actor Innocent thekkethala passed away

People looking for online information on Innocent thekkethala, Innocent thekkethala passed away, Malayalam Actor will find this news story useful.