www.garudabazaar.com

பிரபல டிரெண்டிங் பாட்டுக்கு டான்ஸ் ஆடி அசத்திய அதிதி ஷங்கர்.. சும்மா வேறலெவல் வீடியோ!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை அதிதி ஷங்கர், டிரெண்ட் ஆகி வரும் சூப்பர் ஹிட் பாடலுக்கு நடனம் ஆடும் வீடியோ காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகின்றன.

Aditi Shankar Dancing Tum Tum Song

Images are subject to © copyright to their respective owners.

Also Read | 'விடுதலை' படத்தின் ஷூட்டிங்கில் சுதா கொங்கரா.. வெற்றிமாறன் கொடுத்த வாக்குறுதி! வைரல் ட்வீட்

இயக்குனர் ஷங்கரின் மகளான அதிதி ஷங்கர், நடிகர் கார்த்தி நடிப்பில் முத்தையா இயக்கத்தில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 12 ஆம் தேதி வெளிவந்த விருமன் படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார்.  இந்த திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.

விருமன் திரைப்படத்தை சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்தது.  யுவன் ஷங்கர் ராஜா இந்த படத்துக்கு இசையமைத்தார். இந்த படத்தில்  ராஜ்கிரண், பிரகாஷ்ராஜ், வடிவுக்கரசி, சரண்யா, கருணாஸ், சூரி உட்பட பலர் நடித்தனர். 

விருமன் படத்தின் வெற்றிக்கு பிறகு நடிகை அதிதி ஷங்கர், அவ்வப்போது போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் .

கடந்த நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு 9 நாளுக்கு 9 தீமில் அதிதி ஷங்கர் போட்டோ ஷூட் நடத்தி இருந்தார்.

Aditi Shankar Dancing Tum Tum Song

Images are subject to © copyright to their respective owners.

மேலும் பிரபல ஜவுளி நிறுவனத்தின் தீபாவளி விளம்பர படத்தில் கூட நடிகை அதிதி ஷங்கர் நடித்திருந்தார். அதிதி ஷங்கருடன் நடிகை ராதிகா சரத்குமாரும் அந்த விளம்பரத்தில் தோன்றி இருந்தார்.

அதிதி ஷங்கர் அடுத்ததாக சிவகார்த்திகேயன் நடிக்கும் 'மாவீரன்' படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

Aditi Shankar Dancing Tum Tum Song

Images are subject to © copyright to their respective owners.

இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகை அதிதி ஷங்கர், எனிமி படத்தில் தமன் இசையில் விவேகா பாடல் வரிகளில் இடம்பெற்ற டும் டும் பாடலுக்கு நடனம் ஆடும் வீடியோவை பகிர்ந்துள்ளார். தாமதமாக இந்த டிரெண்ட்டில் கலந்து கொண்டதாகவும் அதிதி ஷங்கர் பதிவிட்டுள்ளார்.

Also Read | வெற்றிமாறன் இயக்கும் விடுதலை.. ஐரோப்பா & UK உரிமத்தை கைப்பற்றிய முன்னணி நிறுவனம்!

பிரபல டிரெண்டிங் பாட்டுக்கு டான்ஸ் ஆடி அசத்திய அதிதி ஷங்கர்.. சும்மா வேறலெவல் வீடியோ! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Aditi Shankar Dancing Tum Tum Song

People looking for online information on Aditi Shankar, Aditi Shankar Dance Tum Tum Song will find this news story useful.