www.garudabazaar.com
iTechUS

ராம் சரண் - ஜூனியர் NTR Combo மாதிரி இதுவும் நல்லா இருக்கே.. ஆனந்த் மஹிந்திராவின் Naatu Naatu டான்ஸ்!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகராக இருப்பவர் ராம்சரண். இவரது நடிப்பில் கடந்த ஆண்டு 'RRR' திரைப்படம் வெளியாகி இருந்தது. இந்த திரைப்படத்தை இயக்குனர் ராஜமௌலி இயக்கி இருந்தார். ராம்சரணுடன் இந்த படத்தில் ஜூனியர் என்டிஆர், ஆலியா பட், சமுத்திரக்கனி, அஜய் தேவ்கன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

Ram charan and Anand Mahindra Dance for Naatu Naatu

Images are subject to © copyright to their respective owners

இந்தியா மட்டுமில்லாமல், சர்வதேச அரங்கிலும் இந்த திரைப்படம் கவனம் பெற்றது. சமீபத்தில், கோல்டன் குளோப் விருதையும் RRR படத்தில் வரும் நாட்டு நாட்டு என்ற பாடல் வென்றது. இதற்கடுத்து உலகின் உயரிய விருதான ஆஸ்கர் விருதுகள் பட்டியலின் நாமினேஷனிலும் நாட்டு நாட்டு பாடல் இடம் பெற்றுள்ளது.

அதே போல, RRR படத்தை பிரபல ஹாலிவுட் இயக்குனர்கள் சிலர் கூட பாராட்டி, ராஜமௌலிக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்திருந்தனர். RRR படத்தைத் தொடர்ந்து, அடுத்ததாக ஷங்கர் இயக்கும் "RC 15" என்ற திரைப்படத்திலும் ராம்சரண் நடித்து வருகிறார்.

இந்த நிலையில், சமீபத்தில் ஹைதராபாத்தில் நடந்த கார் பந்தயம் ஒன்றில் நடிகர் ராம்சரண் மற்றும் ஆனந்த் மஹிந்திரா கலந்து கொண்ட நிலையில் , நாட்டு நாட்டு பாடலுக்கு அவர்கள் ஆடி இருந்த விஷயம் தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.

Images are subject to © copyright to their respective owners

இந்தியாவின் முதல் ஃபார்முலா இ கார் பந்தயம் ஹைதராபாத்தில் நடைபெற்றது. சர்வதேச அளவிலான ஃபார்முலா இ கார் பந்தயத்தின் ஒன்பதாவது சீசனுக்கான முதல் சுற்று மெக்ஸிகோவிலும், அடுத்த இரு சுற்றுகள் சவுதி அரேபியாவிலும் நடைபெற்றிருந்த நிலையில் நான்காவது சுற்று ஹைதராபாத்தில் நடைபெற்றிருந்தது. மஹிந்திரா, நிஸ்ஸான், பார்ஷ், ஜாகுவார், மெக்லாரென், மாசெராட்டி, போன்ற பிரபல கார் நிறுவனங்கள் இந்த பந்தயத்தில் பங்கேற்றிருந்தன. அதே போல இந்தியாவின் முதல் கார்பந்தயம் என்பதால் இந்த நிகழ்ச்சியில் பல பிரபலங்களும் கலந்து கொண்டிருந்தனர்.

Image Credit : Ram Charan Twitter

அந்த வகையில் பிரபல தொழில் அதிபர் ஆனந்த் மஹிந்திரா, கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர், நடிகர் ராம்சரண் உள்ளிட்ட பலரும் இந்த பந்தயத்தில் கலந்து கொண்டிருந்தனர். அப்படி ஒரு சூழலில் ராம்சரண் மற்றும் ஆனந்த் மஹிந்திரா ஆகியோர் சர்வதேச அளவில் ஹிட்டான "நாட்டு நாட்டு" பாடலில் வரும் டிரேட்மார்க் ஸ்டெப்பை போடவும் செய்திருந்தனர். இது தொடர்பான வீடியோக்கள் தற்போது அதிக கவனம் பெற்று வருகிறது.

 

 

தொடர்புடைய இணைப்புகள்

Ram charan and Anand Mahindra Dance for Naatu Naatu

People looking for online information on Anand Mahindra, Junior NTR, Naatu Naatu, Ram Charan, RRR will find this news story useful.