www.garudabazaar.com

சித்தார்த் & கியாரா திருமணம்.. வேறமாரி சர்ப்ரைஸ் கொடுத்த ஷங்கர் - ராம் சரண் - தில் ராஜூ!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடிக்கும் RC15 படக்குழுவினர், கியாரா & சித்தார்த் திருமணத்திற்கு வாழ்த்து கூறியுள்ளனர்.

RC15 Team Wishes Siddharth Malhotra Kiara advani Marriage

Images are subject to © copyright to their respective owners.

Also Read | காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கிய ஆர்த்தி.. தாலிக்கு குங்குமம் இட்ட ஜெயம் ரவி!  

RC15 படத்தை  ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன் சார்பில் தில் ராஜூ தயாரிக்கிறார். இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புனே நகரில் நடைபெற்றது. அடுத்தக்கட்ட படப்பிடிப்பு ராஜமுந்திரி அருகே உள்ள தோசகாயலபள்ளி கிராமத்தில் நடந்தது. பின் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் நடந்தது. நான்காம் கட்ட படப்பிடிப்பு கடந்த மே மாதம் விசாகப்பட்டினத்தில் நடந்தது.

RC15 Team Wishes Siddharth Malhotra Kiara advani Marriage

Images are subject to © copyright to their respective owners.

இந்த படத்தின் பாடல் படப்பிடிப்பு நியுசிலாந்து நாட்டில் நடைபெற்றது.   மிகப்பெரிய பொருட்செலவில் சுமார் 15 கோடி ரூபாய் செலவில் இந்த படத்தின் ஒரு பாடல் காட்சி மட்டும் நியுசிலாந்து நாட்டில் படமாக்கப்பட்டுள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு ஐத்ராபாத் நகரில் நடந்து வருகிறது.

RC15 Team Wishes Siddharth Malhotra Kiara advani Marriage

Images are subject to © copyright to their respective owners.

பிரபல ஒளிப்பதிவாளர் திரு (எ) திருநாவுக்கரசு ISC இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். இசையமைப்பாளர் தமன் இசையமைக்கிறார். இந்த படத்தின் கதாநாயகியாக நடிகை  கீரா அத்வானி நடித்து வருகிறார்.

ராம்சரண்- கீரா அத்வானியுடன் நடிகர்கள் ஜெயராம், சுனில், அஞ்சலி, எஸ். ஜே. சூர்யா ஆகியோர் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

RC15 Team Wishes Siddharth Malhotra Kiara advani Marriage

Images are subject to © copyright to their respective owners.

இந்நிலையில் பாலிவுட் நடிகர் சித்தார்த் மல்ஹோத்ரா & கியாரா அத்வானி திருமணம் கடந்த பிப்ரவரி மாதம் 7 ஆம் தேதி ராஜஸ்தானில் நடந்தது. சித்தார்த் மல்ஹோத்ரா, ஏக் வில்லன், ஷேர்ஷா, மிசன் மஜ்னு உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து மக்கள் மத்தியில்  பிரபலம் அடைந்தவர் ஆவார். தற்போது படக்குழு சார்பில் படத்தயாரிப்பு நிறுவனம் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளது. அதில் நடிகர் ராம் சரண், இயக்குனர் ஷங்கர், தயாரிப்பாளர் தில் ராஜூ ஆகியோர் படக்குழுவினர் உடன் இணைந்து கியாரா அத்வானி & சித்தார்த் மல்ஹோத்ராவுக்கு திருமண வாழ்த்துகள் கூறி மலர் தூவி வாழ்த்தியுள்ளனர். இந்த வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து நடிகை கியாரா அத்வானி, "எதிர்பார்க்காத இனிமையான சர்ப்ரைஸ் வாழ்த்து இது. நன்றி" என குறிப்பிட்டுள்ளார்.

Also Read | கமல்ஹாசன் மடியில் பா. ரஞ்சித்தின் மகன்.. இணையத்தில் வைரலாகும் CUTE PHOTO!

RC15 Team Wishes Siddharth Malhotra Kiara advani Marriage

People looking for online information on Kiara Advani, RC15, RC15 Team, Siddharth Malhotra, Siddharth Malhotra Kiara advani Marriage will find this news story useful.