www.garudabazaar.com

'துணிவு' படம் பார்த்த ஷாலினி அஜித்குமார்‌?.. ஷோ முடிந்ததும் போனி கபூர் போட்ட வைரல் பதிவு!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் அஜித்குமார்- H.வினோத்- போனிகபூர் மூன்றாவது முறையாக இணையும் படம் 'துணிவு'.

Boney Kapoor Shalini watched Thunivu Preview Show Sources

வரும் 2023 பொங்கலுக்கு (11.01.2023)  துணிவு படம் திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

துணிவு படத்தின் தமிழக ரிலீஸ் உரிமத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படத்தின் ஒட்டுமொத்த வெளிநாட்டு உரிமத்தை லைக்கா நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

Boney Kapoor Shalini watched Thunivu Preview Show Sources

மேலும் இந்த படத்தின் சேட்டிலைட் டிவி ஒளிபரப்பு உரிமத்தை கலைஞர் தொலைக்காட்சி கைப்பற்றி உள்ளது. ஓடிடி ஒளிபரப்பு உரிமத்தை நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. ‌

இந்த படத்திற்கு நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய,   கலை இயக்குனராக மிலன் பணிபுரிய,  இந்த படத்தின் இசையமைப்பாளராக ஜிப்ரான் பணிபுரிகிறார். எடிட்டராக விஜய் வேலுக்குட்டி பணிபுரிகிறார். சண்டை காட்சிகளை சுப்ரீம் சுந்தர் வடிவமைப்பு செய்கிறார்‌‌.

சமீபத்தில் வெளியான துணிவு படத்தின் டிரெய்லர் 60 மில்லியன் பார்வையாளர்களை நோக்கி வைரலாகி வருகிறது. துணிவு படத்தின் அமெரிக்க ரிலீஸ் உரிமத்தை சரிகம நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

Boney Kapoor Shalini watched Thunivu Preview Show Sources

இந்நிலையில் துணிவு படத்தின் ப்ரிவியூ ஷோ, பிரபல ஃபோர் பிரேம்ஸ் நிறுவனத்தில் நடைபெற்றது என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சிறப்பு திரையிடலில் நடிகை ஷாலினி அஜித்குமார், தயாரிப்பாளர் போனி கபூர், அஜித்குமாரின் மேனேஜர் சுரேஷ் சந்திரா உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர் என கூறப்படுகிறது.

Boney Kapoor Shalini watched Thunivu Preview Show Sources

படம் பார்த்த பிறகு போனி கபூர், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் துணிவு படத்தினை பார்த்து விட்டதாக மகிழ்ச்சியான எமோஜிக்களை பகிர்ந்து பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய இணைப்புகள்

Boney Kapoor Shalini watched Thunivu Preview Show Sources

People looking for online information on Ajith Kumar, AK, Boney kapoor, Shalini ajithkumar, Thunivu, Thunivu FDFS will find this news story useful.