www.garudabazaar.com
iTechUS

”என் Sunshine" - போர்ச்சுகலில் இருக்கும் அஜித்.. ஷாலினி பகிர்ந்த Trending புகைப்படங்கள்.!..

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான வலம் வருபவர் நடிகர் அஜித் குமார்.

Shalini shared Ajith Kumar Latest Portugal Photo on Instagram

Images are subject to © copyright to their respective owners.

தமிழ் சினிமாவில் நடிகர் அஜித்திற்க்கென்று தனிப்பட்ட ரசிகர் பட்டாளமே உள்ளது. பல இளைஞர்களுக்கு நடிகர் அஜித் ஆதர்ச நாயகனாக இருக்கிறார். சமூக வலைதளங்களான பேஸ்புக்,டிவிட்டர், இன்ஸ்டாகிராமில் அதிகாரப்பூர்வ கணக்குகள் எதுவும் இவருக்கு கிடையாது. சமூக வலைதளங்களில் இருந்து ஒதுங்கியே இன்று வரை இருந்து வருகிறார். ரசிகர்களின் ரசிகர் மன்ற கணக்குகளே சமூக வலைதளங்களில் இருந்து வருகின்றன.

சமீபத்தில் நடிகர் அஜித் நடிப்பில் பல ரசிகர்களின் எதிபார்ப்பிற்கு இடையில் பொங்கலை முன்னிட்டு ஜனவரி மாதம் 10 ஆம் தேதி துணிவு திரைப்படம் வெளிவந்தது. துணிவு திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

இந்த படத்தில் நடிகை மஞ்சு வாரியர்  கண்மணி எனும் கதாபாத்திரத்தில் நடித்தார். சார்பட்டா பரம்பரை படத்தில் வேம்புலி கதாபாத்திரத்தில் நடித்த ஜான் கொக்கென் இந்த  படத்தில் கிரிஷ் எனும் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

துணிவு படம் வரும் பிப்ரவரி 8 ஆம் தேதி முதல் நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Shalini shared Ajith Kumar Latest Portugal Photo on Instagram

Images are subject to © copyright to their respective owners.

இந்நிலையில் நடிகர் அஜித்குமார் லண்டன் பயணத்தை முடித்து விட்டு தற்போது போர்ச்சுக்கல் நாட்டில் உள்ளார். போர்ச்சுக்கல் நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் நடிகர் அஜித் குமாரின் புகைப்படங்களை நடிகை ஷாலினி அஜித்குமார் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். My Sunshine என தலைப்பிட்டு போர்ச்சுக்கல் நாட்டின் Praia Do Tamariz கடற்கரையில் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். மேலும் நவீன கட்டடத்தின் பால்கனியில் அஜித்குமார் நிற்கும் புகைப்படத்தையும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷாலினி பகிர்ந்துள்ளார்.

Shalini shared Ajith Kumar Latest Portugal Photo on Instagram

Images are subject to © copyright to their respective owners.

இந்த புகைப்படங்கள் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகின்றன.

சமீபத்தில் நடிகர் அஜித் குமாரின் மனைவி நடிகை ஷாலினி இன்ஸ்டாகிராம் சமூக வலைத்தளத்தில் அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய இணைப்புகள்

Shalini shared Ajith Kumar Latest Portugal Photo on Instagram

People looking for online information on Ajith Kumar, Shalini Ajith will find this news story useful.