www.garudabazaar.com

மனைவி ஷாலினியின் பிறந்தநாள்.. குடும்பத்துடன் கொண்டாடிய அஜித்குமார்! வைரல் போட்டோஸ்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

குடும்பத்துடன் மனைவி ஷாலினியின் பிறந்தநாளை நடிகர் அஜித்குமார் கொண்டாடியுள்ளார்.

Shalini Ajith Kumar Birthday Party with Family Members

Also Read | தெலுங்கு நடிகர் நாக சவுர்யா & அனுஷா ஷெட்டிக்கு டும்டும்.!!.. ரசிகர்கள் வாழ்த்து Naga Shaurya Anusha Shetty Wedding

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான வலம் வருபவர் நடிகர் அஜித் குமார்.

தமிழ் சினிமாவில் நடிகர் அஜித்திற்க்கென்று தனிப்பட்ட ரசிகர் பட்டாளமே உள்ளது. பல இளைஞர்களுக்கு நடிகர் அஜித் ஆதர்ச நாயகனாக இருக்கிறார். சமூக வலைதளங்களான பேஸ்புக்,டிவிட்டர், இன்ஸ்டாகிராமில் அதிகாரப்பூர்வ கணக்குகள் எதுவும் இவருக்கு கிடையாது. சமூக வலைதளங்களில் இருந்து ஒதுங்கியே இன்று வரை இருந்து வருகிறார். ரசிகர்களின் ரசிகர் மன்ற கணக்குகளே சமூக வலைதளங்களில் இருந்து வருகின்றன.

Shalini Ajith Kumar Birthday Party with Family Members

சமீபத்தில் நடிகர் அஜித் நடிப்பில் பல ரசிகர்களின் எதிபார்ப்பிற்கு இடையில் கடந்த பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி வலிமை திரைப்படம் வெளிவந்தது. வலிமை திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

குறிப்பாக பைக் ஸ்டண்ட் காட்சிகளுக்கும் சென்டிமெண்ட் காட்சிகளுக்கும் பெரும் ரசிகர்கள் கூடினார்கள். வலிமை திரைப்படம் உலகளவில் 200 கோடிக்கும் மேல் பாக்ஸ் ஆஃபீஸ் வசூல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Shalini Ajith Kumar Birthday Party with Family Members

வலிமை படத்திற்கு பிறகு அஜித், துணிவு படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் நடிகை மஞ்சு வாரியர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சார்பட்டா பரம்பரை படத்தில் வேம்புலி கதாபாத்திரத்தில் நடித்த ஜான் கொக்கென் இந்த  படத்திலும் நடித்து வருகிறார். பிரபல இளம் தமிழ் சினிமா நடிகர் வீராவும் இந்த படத்தில் நடிப்பதை உறுதி செய்துள்ளார். பிக்பாஸ் பவனி அமீர் இருவரும் இணைந்து நடிக்கின்றனர்.

இந்த படத்தின் ஒளிப்பதிவை நீரவ் ஷா கவனிக்கிறார். கலை இயக்குனராக மிலன் பணிபுரிய, சண்டை காட்சிகளை சுப்ரீம் சுந்தர் வடிவமைப்பு செய்கிறார்‌‌.  இந்த படத்தின் இசையமைப்பாளராக ஜிப்ரான் பணிபுரிகிறார். எடிட்டராக விஜய் வேலுக்குட்டி பணிபுரிகிறார்.

Shalini Ajith Kumar Birthday Party with Family Members

துணிவு படம் வரும் பொங்கலுக்கு ரிலீஸ் ஆக உள்ளது. இந்த படத்தின் தமிழக ரிலீஸ் உரிமத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளது. மேலும் வெளிநாட்டு உரிமத்தை லைக்கா நிறுவனம் கைப்பற்றியுள்ளது. தற்போது இந்த படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் நேற்று நடிகையும் நடிகர் அஜித்தின் மனைவியுமான ஷாலினி தனது 43வது பிறந்தநாளை கொண்டாடினார். இதனை முன்னிட்டு சென்னையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் பிறந்தநாள் விழா நடைபெற்றது. இதில் நடிகர் அஜித் குமாரின் குடும்பத்தினர் கொண்டாடினர். இந்நிகழ்வில் அஜித் & ஷாலினியுடன்  குழந்தைகள் அனோஷ்கா, ஆத்விக், மைத்துனர் ரிச்சர்டு ரிஷி, ஷாம்லி  கலந்து கொண்டனர். இது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகின்றன.

Also Read | கூலாக என்ட்ரி.. 'ரஞ்சிதமே' ஸ்டைலில் விஜய் கொடுத்த Flying Kiss தான் இப்போ ட்ரெண்டிங்!!

மனைவி ஷாலினியின் பிறந்தநாள்.. குடும்பத்துடன் கொண்டாடிய அஜித்குமார்! வைரல் போட்டோஸ் வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Shalini Ajith Kumar Birthday Party with Family Members

People looking for online information on Ajith Kumar, Shalini, Shalini Birthday Celebration will find this news story useful.