www.garudabazaar.com

"விக்ரமன் பத்தி அப்ப ஒண்ணு சொன்னாரு".. அமுதவாணனை போட்டு கொடுத்த மைனா நந்தினி!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் 6 ஆவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. சுமார் 80 நாட்களை கடந்துள்ள பிக்பாஸ் நிகழ்ச்சி ஏறக்குறைய இறுதிக் கட்டத்தை தற்போது எட்டி உள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.

Myna Nandhini and Amudhavanan speech in debate task bigg boss

Also Read | வசமா போட்டுக் கொடுத்த மைனா.. அடுத்த நிமிஷமே அசிம் சொன்ன வார்த்தை!!.. செம Fun-ப்பா 😅

அப்படி ஒரு சூழலில், இனி வரும் நாட்களில் இறுதி சுற்று வரை முன்னேற அனைத்து போட்டியாளர்களும் அசத்தலாக விளையாடி ஆக வேண்டும் என்ற நிலையும் உள்ளது.

சமீபத்தில் மணிகண்டா ராஜேஷ் பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியே வந்த பின்னர் தற்போது 8 போட்டியாளர்கள் வீட்டுக்குள் இருக்கின்றனர். விரைவில் Finale வர உள்ளதால், அடுத்தடுத்து எந்தெந்த போட்டியாளர்கள் முன்னேறி செல்வார்கள் என்பதை அறியவும் பார்வையாளர்கள் ஆவலாக உள்ளனர்.

இதற்கு மத்தியில் நாமினேஷன் டாஸ்க்கிற்கு புதிய முறையையும் கையாண்டுள்ளது பிக் பாஸ். பொதுவாக ஒவ்வொரு போட்டியாளர்களும் மற்ற போட்டியாளர்கள் பெயர்களை குறிப்பிட்டு நாமினேஷன் செய்வார்கள். ஆனால் இந்த முறை தங்கள் ஆடியது குறித்த சுவாரஸ்ய கருத்துக்களை பேச வைத்து அதில் ஒருவரை நாமினேஷன் ப்ரீ Zone என குறிப்பிட்டிருந்தது. இதில், அசிம் வெற்றி பெற்றுள்ளார்.

Myna Nandhini and Amudhavanan speech in debate task bigg boss

இதற்கு மத்தியில், அனைத்து போட்டியாளர்கள் மற்றும் பார்வையாளர்கள் எதிர்பார்த்த Ticket To Finale சுற்று தற்போது ஆரம்பமாகி உள்ளதாக தெரிகிறது. நிறைய கடினமான போட்டிகள் உள்ளிட்டவை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வார இறுதியில், அதிக Tiles கொண்டு தடம் பதிக்கும் நபர், நேரடியாக இறுதி சுற்றுக்கு தகுதி பெறுவார்கள். மேலும், அனைத்து போட்டியாளர்களுக்கும் ஏராளமான ரசிகர்கள் இருப்பதால் எந்த போட்டியாளர் முதல் ஆளாக இறுதி சுற்றுக்கு முன்னேறுவார் என்பதை அறியவும் ஆவலாக உள்ளனர்

இதில் Ticket To Finale சுற்றில் இரண்டாவது டாஸ்க்காக, Debate டாஸ்க் அரங்கேறி இருந்தது. இதில் இரண்டு போட்டியாளர்கள் மாறி மாறி விவாதம் செய்து கொள்ள வேண்டும். அவர்கள் முன்னே இருக்கும் பல்புகளில் அதிகம் யாருக்கு எரிகிறதோ அவரே வெற்றியாளர் என்றும் பிக் பாஸ் தெரிவிக்கிறார்.

Myna Nandhini and Amudhavanan speech in debate task bigg boss

இதில் பல போட்டியாளர்கள் இடையே நடந்த விவாதங்கள் பெரிய அளவில் விறுவிறுப்பை எகிற வைத்திருந்தது. அப்படி ஒரு சூழலில், அமுதவாணன் மற்றும் மைனா நந்தினி ஆகியோரிடையே நடந்த விவாதம் பெரிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மைனா நந்தினி மற்றும் அமுதவாணன் ஆகியோர்களுக்கு இடையே நடந்த விவாதத்தின் போது, ஒரு டாஸ்க்கில் தனக்கு வாய்ப்பு தராமல் போனது பற்றி கேள்வி ஒன்றை மைனா நந்தினி முன் வைத்து முறையிடுகிறார். இதற்கு பதில் சொல்லும் அமுதவாணன், கதிரவன், ஏடிகே, விக்ரமன் உள்ளிட்ட பலருக்கும் வாய்ப்பு கொடுத்ததாகவும் அதில் விக்ரமன் கூட ஒரு சில டாஸ்க்கில் சிறப்பாக நடித்திருந்தார் என்றும் பதில் தெரிவிக்கிறார்.

Myna Nandhini and Amudhavanan speech in debate task bigg boss

அந்த சமயத்தில், விக்ரமனுக்கு வாய்ப்பு கொடுத்து விட்டு பின்னால் அமுதவாணன் என்ன பேசினார் என்பதை நினைவுகூர்ந்த மைனா, ராபர்ட் மாஸ்டர் வாய்ப்பை தானாக முன் வந்து விக்ரமன் வாங்கிக் கொண்டதை அமுதவாணன் விமர்சித்தது பற்றியும் பேசுகிறார். இதற்கடுத்து பேசும் அமுதவாணன், "பெஸ்ட் சொல்லுறத விட்டுட்டு ஒரு ஆள பத்தி போட்டு குடுக்குறதே தப்பு" என தெரிவிக்கிறார். இதனை கேட்டதுமே விக்ரமன், மைனா நந்தினி, ஷிவின் உள்ளிட்டோர் சிரிக்கவும் செய்கின்றனர்.

விக்ரமன் பற்றி பின்னால் அமுதவாணன் பேசியதை மைனா போட்டு உடைக்க, பதிலுக்கு அவரும் போட்டு கொடுக்காதீங்க என கூறிய விஷயங்கள், அதிகம் வைரலாகி வருகிறது.

Also Read | "நைஸ் உருட்டல்".. Bigg Boss சொன்ன வார்த்தை.. அடுத்த நிமிஷமே ஷிவின் சொன்னதுதான் ஹைலைட்😅!!

தொடர்புடைய இணைப்புகள்

Myna Nandhini and Amudhavanan speech in debate task bigg boss

People looking for online information on Amudhavanan, Bigg Boss 6, Bigg boss 6 tami, Bigg Boss Tamil, Myna Nandhini, Vikraman will find this news story useful.