www.garudabazaar.com

Salman Khan : மத்திய பிரதேசம் டூ மும்பை.. சல்மான் கானை பார்க்க சைக்கிளிலேயே வந்த வெறித்தனமான ரசிகர்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கான் அண்மையில் தம்முடைய பிறந்தநாளை கொண்டாடினார். அவருக்கு வாழ்த்துக்களை தெரிவிப்பதற்கு ஆயிரக்கணக்கான ரசிகர்கள் அவருடைய வீட்டின் முன்பாக கூடினர்.

fan rides cycle from MP to mumbai to see salman khan

Also Read | "நைஸ் உருட்டல்".. Bigg Boss சொன்ன வார்த்தை.. அடுத்த நிமிஷமே ஷிவின் சொன்னதுதான் ஹைலைட்😅!!

இந்த செய்திகளை தொடர்ந்து தற்போது அவரை பார்ப்பதற்கு ரசிகர் ஒருவர் செய்துள்ள விஷயம் நெகிழ வைத்துள்ளது. இந்த விஷயம் செய்தியாக பரவி வருகிறது. பிரபல பாலிவுட் நடிகர் சல்மான்கானுக்கு இந்தியா முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் இருக்கின்றனர். அவ்வப்போது அவரை காண்பதற்கு இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ரசிகர்கள் வந்த வண்ணம் இருந்திருக்கின்றனர். அண்மையில் அவருடைய இல்லத்தின் முன்பாக ரசிகர்கள் அவருடைய பிறந்தநாளுக்காக கூடி இருந்த போது கூட பலத்த போலீஸ் பாதுகாப்பு தேவைப்படும் அளவுக்கு ரசிகர்கள் கூட்டம் மிஞ்சி இருந்தது.

fan rides cycle from MP to mumbai to see salman khan

இந்த நிலையில்தான் மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் சல்மானை சல்மான் காலை பார்ப்பதற்காக சைக்கிளில் புறப்பட்டு இருக்கிறார். ஆம் சைக்கிளில் புறப்பட்ட அந்த இளைஞரது பெயர் சமீர். சமீர் மத்திய பிரதேசத்தின் ஜபல்பூரிலிருந்து புறப்பட்டு கடும் குளிர் உள்ளிட்ட சீதோஷ்ன நிலைகளையும் பொருட்படுத்தாமல் சைக்கிள் ஓட்டிக்கொண்டே மும்பைக்கு வந்திருக்கிறார். ஒரு மாநிலத்திலிருந்து ஒரு நடிகரை காண்பதற்காக இன்னொரு மாநிலத்துக்கு சைக்கிளிலேயே வந்த இந்த ரசிகரது செயல் வைரலாகியுள்ளது.

fan rides cycle from MP to mumbai to see salman khan

இறுதியாக சல்மான் கானை, மும்பை பாந்த்ராவில் சென்று சந்திப்பதற்கு அவருடைய வீட்டுக்கு சென்று இருக்கிறார் சமீர். சமீர் வந்த அதே நேரம் அதிர்ஷ்டவசமாக சல்மான் கானும் வீட்டில் இருந்ததால், சமீர் அத்தனை தொலைவு கடந்து வந்தது வீண் போகவில்லை. சல்மான் கானை சந்திக்க மத்திய பிரதேசத்திலிருந்து சைக்கிளில் சமீர் வந்த செய்தி, சல்மான் கானுக்கு தெரியப்படுத்தப்பட்ட உடனேயே சமீரை, சல்மான் கான் அழைத்து பேசியிருக்கிறார். அத்துடன் தன்னுடைய ரசிகரான சமீருடன் சல்மான் கான் புகைப்படமும் எடுத்திருக்கிறார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

Also Read | அட.. ஜனனி தங்கையா அவங்க? அப்படியே ஜனனி மாதிரியே!! – புத்தாண்டில் வெளியிட்ட ஃபோட்டோ.! Bigg Boss

தொடர்புடைய இணைப்புகள்

fan rides cycle from MP to mumbai to see salman khan

People looking for online information on MADHYA PRADESH, Mumba, Salman Khan, Salman khan fans will find this news story useful.