www.garudabazaar.com

பொங்கலுக்கு வர்றார் அஜித்!.. சென்சார் ஆன 'துணிவு'.. ரன்னிங் டைம் எவ்வளவு?.. முழு தகவல்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

துணிவு படம் இந்திய அரசின் சென்சார் போர்டு மூலம் சென்சார் ஆகி உள்ளது.

Ajith Kumar Thunivu Censored Running Time Details CBFC

Also Read | "வாரிசு பட விழாவில் விஜய் ஹேர் ஸ்டைல் & உடை இன்னும் கொஞ்சம்".. ஜேம்ஸ் வசந்தன் கருத்து!

நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களின் வெற்றிக்கு பிறகு  நடிகர் அஜித்குமார்- H.வினோத்- போனிகபூர் மூன்றாவது முறையாக இணையும் படம்  'துணிவு'.

இந்த படத்தை H. வினோத் இயக்க, நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய, போனி கபூர் தயாரிக்கிறார். ஐத்ராபாத், சென்னை, விசாகப்பட்டினம், பேங்காக் நகர்களில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்தது. இந்த படத்தின்  இறுதிக்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடந்தது.

Ajith Kumar Thunivu Censored Running Time Details CBFC

இந்த படத்தில் நடிகை மஞ்சு வாரியர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சார்பட்டா பரம்பரை படத்தில் வேம்புலி கதாபாத்திரத்தில் நடித்த ஜான் கொக்கன் இந்த  படத்திலும் நடித்துள்ளார். பிரபல இளம் தமிழ் சினிமா நடிகர் வீராவும் இந்த படத்தில் நடித்துள்ளார். மேலும் பிக்பாஸ் பிரபலங்களான பவனி & அமீர் இருவரும் நடித்துள்ளனர்.

Ajith Kumar Thunivu Censored Running Time Details CBFC

இந்த படத்தின் கலை இயக்குனராக மிலன் பணிபுரிய, சண்டை காட்சிகளை சுப்ரீம் சுந்தர் வடிவமைப்பு செய்கிறார்‌‌.  இந்த படத்தின் இசையமைப்பாளராக ஜிப்ரான் பணிபுரிகிறார். எடிட்டராக விஜய் வேலுக்குட்டி பணிபுரிகிறார்.

துணிவு படத்தின் தமிழக ரிலீஸ் உரிமத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளது. மேலும் ஒட்டுமொத்த வெளிநாட்டு உரிமத்தை லைக்கா நிறுவனம் கைப்பற்றியுள்ளது.  துணிவு படத்தின் ஆடியோ உரிமத்தை ஜி மியூசிக் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

Ajith Kumar Thunivu Censored Running Time Details CBFC

துணிவு படத்தின் டிரெய்லர் நேற்று முன்தினம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இதுவரை தமிழ் சினிமாவில் வெளியான அனைத்து படங்களின் சாதனைகளையும் முறியடித்து உள்ளது.

Ajith Kumar Thunivu Censored Running Time Details CBFC

இந்நிலையில் துணிவு படத்தின் ரன்னிங் டைம் விவரத்தை இந்திய அரசின் சென்சார் போர்டு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. அதன்படி துணிவு திரைப்படம்,  2 மணி நேரம் 25 நிமிடங்கள் 48 வினாடிகள் ஓடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read | திருத்தணி கோயிலில் யோகி பாபு.. VIP-களுக்கான அனுமதி மறுப்பால் மக்களோடு சாமி தரிசனம்.. VIDEO!

தொடர்புடைய இணைப்புகள்

Ajith Kumar Thunivu Censored Running Time Details CBFC

People looking for online information on Ajith Kumar, CBFC, Thunivu, Thunivu Movie Running Time will find this news story useful.