www.garudabazaar.com

Thunivu : செம.. அஜித்தின் துணிவு படத்தில் இணைந்த விஜய் டிவி பிரபலம்.. அவரே வெளியிட்ட தகவல்.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

முன்னணி நடிகரான அஜித் குமார் நடிப்பில் துணிவு திரைப்படம் 2023 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Actor Thangadurai joins Thunivu Ajith Kumar H Vinoth

இந்த படத்தை H வினோத் இயக்கி வருகிறார். மேலும் போனி கபூர் படத்தை தயாரித்துள்ளார். ஜிப்ரான் இசையமைக்கும் இந்த திரைப்படத்திற்கு நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்து வருகிறார். துணிவு படத்தின் இரண்டு பாடல்கள் ஏற்கனவே வெளியாகி உள்ள நிலையில், 3 ஆவது பாடலும் டிசம்பர் 25 ஆம் தேதியன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தில் நடிகர் அஜித் குமாருடன் மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி, ஜான் கொக்கென், வீரா, அமீர், சிபி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

இந்த நிலையில், விஜய் டிவி பிரபலம் ஒருவர் துணிவு படத்தில் இணைந்துள்ளார். ஆம், விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த கலக்கப்போவது யாரு , குக் வித் கோமாளி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் மூலம் அதிகம் பிரபலமானவர் தங்கதுரை. இவர் தன்னுடைய பழைய ஜோக்குகள் உள்ளிட்ட விஷயங்களை பேசி பல நகைச்சுவை நிகழ்ச்சிகளின் மூலம் மக்கள் மத்தியில் அதிகம் கவனம் ஈர்த்தவர் அவர்.

பிளான் பண்ணி பண்ணனும், ஏ1 ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ள தங்கதுரை தற்போது துணிவு படத்திலும் நடித்துள்ளதாக தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இதில் துணிவு படத்தில் இயக்குனர் எச். வினோத்துடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்த தங்கதுரை, " துணிவு படத்தில் இணைந்தது மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது. இந்த வாய்ப்பை கொடுத்ததற்கு நன்றி H.வினோத் சார். என்னோட ரியல் இன்ஸ்பிரேஷன் தல" என குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய இணைப்புகள்

Actor Thangadurai joins Thunivu Ajith Kumar H Vinoth

People looking for online information on Ajith, Ajith Kumar, Thangadurai, Thunivu, Thunivu Pongal will find this news story useful.