www.garudabazaar.com

அஜித் நடிக்கும் 'துணிவு'.. இந்திய அரசின் சென்சார் போர்டால் திருத்தப்பட்ட 13 இடங்கள்..

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் அஜித்குமார்- H.வினோத்- போனிகபூர் மூன்றாவது முறையாக இணையும் படம் 'துணிவு'.

Ajith Kumar Thunivu Movie Censor Board Modifications CBFC

Also Read | "வாரிசு பட விழாவில் விஜய் ஹேர் ஸ்டைல் & உடை இன்னும் கொஞ்சம்".. ஜேம்ஸ் வசந்தன் கருத்து!

வரும் 2023 பொங்கலுக்கு துணிவு படம் திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

துணிவு படத்தின் தமிழக ரிலீஸ் உரிமத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படத்தின் ஒட்டுமொத்த வெளிநாட்டு உரிமத்தை லைக்கா நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

Ajith Kumar Thunivu Movie Censor Board Modifications CBFC

மேலும் இந்த படத்தின் சேட்டிலைட் டிவி ஒளிபரப்பு உரிமத்தை கலைஞர் தொலைக்காட்சி கைப்பற்றி உள்ளது. ஓடிடி ஒளிபரப்பு உரிமத்தை நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. ‌

Ajith Kumar Thunivu Movie Censor Board Modifications CBFC

இந்த படத்திற்கு நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய,   கலை இயக்குனராக மிலன் பணிபுரிய,  இந்த படத்தின் இசையமைப்பாளராக ஜிப்ரான் பணிபுரிகிறார். எடிட்டராக விஜய் வேலுக்குட்டி பணிபுரிகிறார். சண்டை காட்சிகளை சுப்ரீம் சுந்தர் வடிவமைப்பு செய்கிறார்‌‌.

Ajith Kumar Thunivu Movie Censor Board Modifications CBFC

இந்த படத்தின் 3 சிங்கிள் பாடல்கள் ஏற்கனவே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. இதில் சில்லா சில்லா பாடலை வைசாக் எழுத அனிருத் ரவிச்சந்திரன் பாடியுள்ளார். இரண்டாவது சிங்கிள்  காசேதான் கடவுளடா பாடலை வைசாக் எழுதி பாடியுள்ளார். கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு இந்த படத்தின் மூன்றாவது சிங்கிள் பாடல் கேங்ஸ்டா வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மூன்றாவது சிங்கிள் பாடலை சபீர் பாடியுள்ளார்.

Ajith Kumar Thunivu Movie Censor Board Modifications CBFC

நேற்று முன்தினம் துணிவு படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் இன்று துணிவு படத்தின் சென்சார் தகவல் அதிகாரப்பூர்வமாக இந்திய அரசின் சென்சார் போர்டு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதில் 13 இடங்களில் சென்சார் போர்டு திருத்தம் செய்துள்ளது. அதில் இரண்டு இடங்களில் சென்சார் போர்டு படத்தின் காட்சிகளை நீக்கியும், குறைத்தும் உள்ளது. சில வசனங்கள் ஓசை நீக்கம் செய்யப்பட்டுள்ளது.

Also Read | பொங்கலுக்கு வர்றார் அஜித்!.. சென்சார் ஆன 'துணிவு'.. ரன்னிங் டைம் எவ்வளவு?.. முழு தகவல்

தொடர்புடைய இணைப்புகள்

Ajith Kumar Thunivu Movie Censor Board Modifications CBFC

People looking for online information on Ajith Kumar, Thunivu, Thunivu Movie Censor Board update will find this news story useful.