www.garudabazaar.com

வைரலாகும் ஷாருக்கான் வீட்டின் வாசல்.. டிசைன் செய்த மனைவி கௌரி கான்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் ஷாருக்கான், வீட்டின் வாசல் டிசைன் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

Shah Rukh Khan House Entrance Design by Gauri Khan

Also Read | நடிகர் அஜித்குமார் - சிவகார்த்திகேயன் சந்திப்பு.. இணையத்தை கலக்கும் வைரல் ஃபோட்டோ!

பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானுக்கு இந்தியா மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் பரவலாக ரசிகர்கள் உள்ளனர்.

ஷாருக்கான், கடந்த வருடம் இயக்குனர் அட்லி இயக்கத்தில் புதிய படத்தில் (ஜவான்) நடிக்க ஒப்பந்தமானார். அதே போல் ராஜ்குமார் ஹிரானியுடன் (டங்கி) ஒரு படமும் கமிட் ஆனார்.

இந்த படங்களுக்கு முன்பே இந்தியில் ஹிர்திக் ரோஷன் நடிப்பில் வெளியாகி ப்ளாக்பஸ்டர் ஆன 'வார்' படத்தின் இயக்குனர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் 'பதான்' படத்தில் நடிக்க கமிட் ஆனார். 

Shah Rukh Khan House Entrance Design by Gauri Khan

இப்படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடிகை தீபிகா படுகோனே நடிக்கிறார். மேலும் பிரபல பாலிவுட் நடிகர் ஜான் ஆபிரஹாம் முக்கிய ரோலில் நடிக்கிறார்.

பான் இந்திய படமாக இந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் 2023 ம் ஆண்டு ஜனவரி 25ம் தேதி திரையரங்குகளில் பதான் படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Shah Rukh Khan House Entrance Design by Gauri Khan

சமீபத்தில் ஷாருக்கான் தனது 57வது பிறந்தநாளை கொண்டாடினார். தனது வீட்டில் கூடிய ஆயிரக்கணக்கான ரசிகர்களை சந்தித்து ஷாருக்கான் கையசைத்த வீடியோக்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வைரலாக பரவின.

இந்நிலையில் நடிகர் ஷாருக்கான் மனைவி கௌரி கான் தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு ட்வீட்டை ட்வீட் செய்துள்ளார். அதில், "உங்கள் வீட்டின் மெயின் கதவு உங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கான நுழைவு வாசலாகும். எனவே அதன் பெயர் பலகை ஒரு பாசிடிவ் எனர்ஜியை ஈர்க்கும்... எனவே  கண்ணாடி படிகங்கள் கொண்ட ஒரு டிரான்ஸ்பேரண்ட் பொருளை வாசலுக்கு தேர்ந்தெடுத்தோம். இந்த மெட்டீரியல் பாசிடிவிட்டி, ஊக்கம் மற்றும் அமைதியான வைபை வெளியிடும் தன்மை கொண்டது." என ட்வீட் செய்துள்ளார்.

Shah Rukh Khan House Entrance Design by Gauri Khan

மேலும் தனது மன்னட் வீட்டின் வாசலில் நின்று, அதன் தற்போதைய புகைப்படத்தையும் பிரத்யேக டிசைனையும் பகிர்ந்துள்ளார்.‌

 

Also Read | சிம்பு நடிக்கும் 'பத்து தல'.. படக்குழுவுடன் கேக் வெட்டிக் கொண்டாடிய STR! சூப்பர் அப்டேட்

தொடர்புடைய இணைப்புகள்

Shah Rukh Khan House Entrance Design by Gauri Khan

People looking for online information on Gauri Khan, Shah Rukh Khan, Shah Rukh Khan House will find this news story useful.