www.garudabazaar.com

"சரியா இருக்கா?.. அப்போ கழட்டி வச்சிடுங்க".. பிக்பாஸ்-ன் Thug Life 😅😂..

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியை கடந்த 5 சீசனாக, நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.

BiggBoss Thug Life Moment in Luxury Budget Task

Also Read | ADK - அசீம் வழக்கில் அனல் பறக்கும் விக்ரமனின் வாதம்.. இன்றைய பிக்பாஸில்..!

இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில், யூடியூபர் ஜி.பி.முத்து, இசைக் கலைஞரான அசல் கோலார், சீரியல் நடிகர் அசீம், திருநங்கை ஷிவின் கணேசன், டான்ஸ் மாஸ்டர் ராபர்ட், மாடல் ஷெரினா, கிரிக்கெட் வீரர் ராம் ராமசாமி, ராப் சிங்கரான ஆர்யன் தினேஷ் (ADK), மாடல் ஷெரினா, தொகுப்பாளினி ஜனனி, KPY அமுதவாணன், VJ மகேஸ்வரி, VJ கதிரவன், சத்யா சீரியல் நடிகை ஆயிஷா, ஈரோடு டிக்டாக் பிரபலம் தனலட்சுமி, நடிகை ரச்சிதா மகாலட்சுமி, ஐஸ்வர்யா ராஜேஷின் சகோதரரான மணிகண்டன் ராஜேஷ், மெட்டி ஒலி ஷாந்தி அரவிந்த், VJ விக்ரமன், மாடல் குயின்சி ஸ்டான்லி, சிங்கப்பூர் மாடல் நிவாஷினி உள்ளிட்ட நபர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

BiggBoss Thug Life Moment in Luxury Budget Task

இவர்களுள் பலரையும் கவர்ந்த ஜிபி முத்து முதலிலேயே வெளியேறினார். இதனை தொடர்ந்து முதல் எலிமினேஷனாக ‘மெட்டி ஒலி’ சாந்தி வெளியேற்றப்பட்டார். பின்னர் அசல், ஷெரீனா, மகேஷ்வரி ஆகியோர் வெளியேற்றப்பட்டனர். இதனையடுத்து, கடந்த வார இறுதியில் நிவாஷினி வெளியேற்றப்படுவதாக கமல் அறிவித்தார்.

இந்நிலையில், பிக்பாஸ் வீட்டில் Luxury பட்ஜெட் டாஸ்க் நடைபெற்று வருகிறது. இதில், வட்ட வடிவிலான சுழலும் மேடையில் ஒருவர் நிற்க வேண்டும். அதன் அருகே இருக்கும் சக்கரத்தை மற்றொரு போட்டியாளர் சுற்ற வேண்டும். தாக்குப்பிடித்து நிற்பவர் இதில் வெற்றிபெறுவார் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. பஸ்ஸரை அழுத்திய பிறகு போட்டியில் கலந்துகொள்ளவேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

BiggBoss Thug Life Moment in Luxury Budget Task

இதனிடையே, சுழலும் மேடையில் விக்ரமன் நிற்க, தனலட்சுமி சக்கரத்தை சுற்றுகிறார். அப்போது குறுக்கிட்ட பிக்பாஸ்,"பஸ்ஸரை அழுத்திய பிறகு சுற்றுங்கள் என்கிறார்". தொடர்ந்து சுழலும் மேடையில் நிற்கும் விக்ரமனிடம் எல்லாம் சரியாக இருக்கிறதா? என பிக்பாஸ் கேட்கிறார். அப்போது அருகில் இருக்கும் மணிகண்டன் விக்ரமனின் காலில் பொருத்தப்பட்டுள்ள இணைப்பை சரிசெய்கிறார். தொடர்ந்து ஹெல்மெட் அணியவேண்டும் எனவும் போட்டியாளர்கள் சொல்கின்றனர்.

BiggBoss Thug Life Moment in Luxury Budget Task

மீண்டும் பேசும் பிக்பாஸ்,"விக்ரமன் எல்லாம் சரியாக இருக்கிறதா? கால்கள் பொருத்தப்பட்டிருக்கிறதா?" என்கிறார். அதற்கு எல்லாம் சரியாக இருப்பதாக விக்ரமன் சொல்ல,"அப்படியென்றால் அதை கழட்டிவிட்டு கீழே இறங்குங்கள்" என்கிறார். இதனை கேட்டு சக போட்டியாளர்கள் அனைவரும் சிரிக்கின்றனர். அசீம்,"Thug Life பிக்பாஸ்" என்றபடி சிரிக்கிறார்.

Also Read | "நான் வீக் ஆகிட்டே போறேன்.. என்னால முடியல".. திடீர்னு கதறியழுத ஜனனி.. அமுதவாணனின் அட்வைஸ்..! BiggBoss6

தொடர்புடைய இணைப்புகள்

BiggBoss Thug Life Moment in Luxury Budget Task

People looking for online information on Azeem, Bigg boss 6 tamil, Bigg Boss Tamil, Bigg Boss Tamil 6, BiggBoss Thug Life Moment, Dhanalakshmi, Vijay Television, Vijay tv, Vikraman will find this news story useful.