Pattamboochi

4 வருடங்களுக்கு பிறகு ஷாருக்கான் நடிப்பில் ரிலீசாகும் முதல் படம்.. தெறியான FIRST LOOK POSTER!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக் கானுக்கு இந்தியா மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் மிகப்பெரிய ரசிகர்கள் உள்ளனர்.

Shah rukh Khan Pathaan Movie First Look Poster

ஷாருக்கான் நடிப்பில் 2013 ஆம் ஆண்டு சென்னை எக்ஸ்பிரஸ் ப்டமும், 2014 ஆம் ஆண்டு வெளியான ஹாப்பி நியூ இயர் படமும் கடைசியாக 2015ல்  வெளியான தில்வாலே படமும் வெற்றி பெற்றது. தொடர் வெற்றிகளால் உச்சத்தில் இருந்த ஷாருக்கானுக்கு, ரயிஸ், பேன், ஜீரோ படங்கள் அடுத்தடுத்து தோல்வி அடைந்தன.

இதனால் சினிமாவில் இருந்து சிறிது காலம் ஒதுங்கினார். பல இயக்குனர்களிடம் கதை கேட்டார். தமிழில் வெற்றிமாறன், அட்லி ஆகியோர் கதை சொல்ல, அட்லி அடுத்த படத்தை (ஜவான்) இயக்க ஒப்பந்தமானார். அதே போல் ராஜ்குமார் ஹிரானியுடன் (டங்கி) ஒரு படமும் கமிட் ஆனார்.

Shah rukh Khan Pathaan Movie First Look Poster

இந்த படங்களுக்கு முன்பே இந்தியில் ஹிர்திக் ரோஷன் நடிப்பில் வெளியாகி ப்ளாக்பஸ்டர் ஆன வார் படத்தின் இயக்குனர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் பதான் படத்தில் நடிக்க கமிட் ஆனார்.  இப்படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடிகை தீபிகா படுகோனே நடிக்கிறார். மேலும் பிரபல பாலிவுட் நடிகர் ஜான் ஆபிரஹாம் முக்கிய ரோலில் நடிக்கிறார். 

ஷாருக்கான் பாலிவுட் திரையுலகில் அறிமுகமாகி 30 வருடங்கள் ஆவதையொட்டி இப்படத்தின் ஷாருக்கானின் முதல் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது. இரண்டு வருடமாக இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது. மேலும் இந்த படத்தின் முன்னோட்டமும் வெளியாகி உள்ளது.

Shah rukh Khan Pathaan Movie First Look Poster

பான் இந்திய படமாக இந்தி, தமிழ், தெலுங்கு உள்ள்ளிட்ட பிராந்திய மொழிகளிலும் 2023 ம் ஆண்டு ஜனவரி 25ம் தேதி திரையரங்குகளில் இந்த படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

 

மேலும் செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Shah rukh Khan Pathaan Movie First Look Poster

People looking for online information on Deepika Padukone, John Abraham, Pathaan, Shahrukh Khan will find this news story useful.