www.garudabazaar.com

இந்தியா முழுவதும் ஹிட் அடித்த "காந்தாரா'.. OTT ரிலீஸ் எப்போ? எதுல?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கன்னட மொழியில் உருவாகிய ஆக்‌ஷன் த்ரில்லர் திரைப்படமான 'காந்தாரா' செப்டம்பர் 30 அன்று கன்னட மொழியில் வெளியானது.

Kantara Movie Prime Video OTT Release Date Announced

Also Read | தளபதி விஜய்க்கு பிடித்த உணவு சமைத்து.. போனில் பேசிய ஷோபா சந்திரசேகர்! நெகிழ்ச்சி வீடியோ

காந்தாரா விமர்சகர்கள் மற்றும் பொதுமக்களிடமிருந்து நல்ல  விமர்சனங்களைப் பெற்றது. இதனால், கர்நாடகா மற்றும் வெளிநாடுகளில் படத்தின் வசூல் அதிகரித்தது. இதே தலைப்புடன் இந்தப் படத்தின் தமிழ் பதிப்பு தமிழ்நாட்டிலும்  வெளியானது. இந்த படம் உலகம் முழுவதும் 400 கோடி ரூபாயை வசூலித்து சாதனை படைத்துள்ளது.

கேஜிஎஃப் புகழ் ஹொம்பாலே பிலிம்ஸ் தயாரிப்பில், ரிஷப் ஷெட்டி எழுதி, இயக்கி, நடித்துள்ள இந்தப் படத்தைப் பார்த்த திரைப்பட ஆர்வலர்கள் ரிஷப் ஷெட்டியின் (குறிப்பாக கிளைமாக்ஸில்) மற்றும் படத்தில் வரும் மண் சார்ந்த பாத்திரங்களின் அசாத்திய நடிப்பினை பாராட்டி வருகின்றனர்.

காந்தாராவில் ஆடுகளம் கிஷோர், மூத்த கன்னட நடிகர் அச்யுத் குமார் (விக்ரம் வேதா, ரஜினி முருகன், வலிமை, தேஜாவு), பிரமோத் ஷெட்டி மற்றும் சப்தமி கவுடா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அஜனீஷ் லோக்நாத்தின் (குரங்கு பொம்மை) இசை படத்தின் இன்னொரு பெரிய சிறப்பம்சமாக அமைந்துள்ளது.

இந்நிலையில் இந்த படம் தற்போது பிரபல அமேசான் பிரைம் வீடியோ ஓடிடி தளத்தில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை  நவம்பர் மாதம் 24 ஆம் தேதி முதல் காந்தாரா ஒளிபரப்பாக உள்ளது.

 

Also Read | வெற்றிமாறன் எழுத்தில் லாரன்ஸின் புதிய படம் குறித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி!

தொடர்புடைய இணைப்புகள்

Kantara Movie Prime Video OTT Release Date Announced

People looking for online information on காந்தாரா, Kantara, Kantara Movie, Kantara Movie OTT Release, Prime Video will find this news story useful.