www.garudabazaar.com
iTechUS

பிரம்மாண்ட ரியாலிட்டி ஷோவை களமிறக்கும் பிரபல டிவி சேனல்.. கலந்துகொள்ளும் 10 ரியல் ஜோடிகள்..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் சின்னத்திரையில் முன்னணி தொலைக்காட்சி சேனல்களில் ஒன்றாக இருந்து வருகிறது ஜீ தமிழ்.

new reality show Super Jodi on Zee Tamil TV

                                              Image Credit : Zee Tamil

இந்த தொலைக்காட்சி சேனலில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள், ரியாலிட்டி ஷோக்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

ஜீ தமிழின் டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சி நல்ல வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து தற்போது சரிகமப நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. அதே போல் ஞாயிறு தோறும் மாலை 6.30 மணிக்கு சூப்பர் மாம் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் ஒளிபரப்பாகி முடிவுக்கு வந்தது.

இதனைத்தொடர்ந்து "சூப்பர் ஜோடி என்ற புத்தம் புதிய நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளதாக தெரிய வந்துள்ளது. பிரபலங்கள், சாதாரண சாமானிய மக்கள், மாற்று திறனாளிகள் என பலதரப்பட்ட 10 ஜோடிகள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளனர்.

ஒவ்வொரு ரியல் ஜோடியும் மாறுபட்ட தருணங்களில் எப்படியான உணர்வுகளை வெளிப்படுத்துகிறார்கள், கணவன் மனைவி இடையேயான புரிதல் எந்த அளவிற்கு உள்ளது, வாழ்க்கையில் அவர்கள் சந்தித்த சந்தோஷம், சோகம், ஏமாற்றம் என அனைத்தையும் வெளியே கொண்டு வரும் மாறுபட்ட நிகழ்ச்சியாக இந்த சூப்பர் ஜோடி நிகழ்ச்சி இருக்கும் எதிர்பார்க்கப்படுகிறது.

new reality show Super Jodi on Zee Tamil TV

Image Credit : Zee Tamil

இந்த நிகழ்ச்சியின் பெரும்பாலான ரவுண்ட்டுகள் அவுட் டோரில் தான் நடைபெறும் எனவும் தெரிய வந்துள்ளது. மேலும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க வாய்ப்புள்ள 10 ஜோடிகள் யாராக இருக்க வாய்ப்புள்ளது என்ற லிஸ்ட் ஒன்றும் வெளியாகி உள்ளது.

1. நவீன் - கிருஷ்ணகுமாரி

2. அமர்தீப் - தேஜஸ்வினி

3. செல்வகுமார் - சின்னப்பொண்ணு

4. கென்னி செபாஸ்டியன் - ஷன்மதி

5. திவ்யா-விக்ரம் (Snazzytamilachi)

6. 'சந்திரலேகா' ஸ்வேதா - மால்முருகா

7. நக்ஷத்திரா - விஷ்வா

8. ஷாமிலி - ராஜ்குமார்

9. ரமேஷ் - சரோஜா தேவி

10.சௌமியா  - சத்யராஜ்

இந்த லிஸ்டில் இடம்பெற்றுள்ளவர்களில் 10 ஜோடிகள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பார்கள் என சொல்லப்படுகிறது.

இந்த நிகழ்ச்சி வரும் பிப்ரவரி 5-ம் தேதி முதல் ஞாயிறு தோறும் மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Also Read | கதை சொன்ன RJ பாலாஜி!! “ஏப்ரல்ல Shoot போலாமா?” - பட்டுனு கேட்ட தளபதி விஜய்..! சம்பவம் இருக்கு..

தொடர்புடைய இணைப்புகள்

new reality show Super Jodi on Zee Tamil TV

People looking for online information on Super Jodi, Zee Tamil will find this news story useful.