இது புது ஃப்லேவராம்....A-1 கூட்டணியில் சந்தானம் படத்தின் டேஸ்டி டைட்டில்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் சந்தானம் நடிக்கும் அடுத்த படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

santhanam r kannan's next movie title is biskoth

தமிழ் சினிமாவில் தற்போது கதாநாயகனாக கலக்கி வருபவர் சந்தானம். காமெடி நடிகராக அறிமுகமான இவர் விஜய், அஜித், ரஜினி உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்களுடன் நகைச்சுசையில் கலக்கினார். இதையடுத்து தற்போது சந்தானம் முழுநேர கதாநாயகன் சார்ந்த நகைச்சுவை படங்களில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார். இவர் ஹீரோவாக நடித்த தில்லுக்கு துட்டு, ஏ 1 ஆகிய படங்கள் ரசிகர்களின் வரவேற்பை பெற்றன.

இந்நிலையில் சந்தானத்தின் அடுத்த படம் பற்றி அறிவிப்பு வெளியாகியுள்ளது. இத்திரைப்படத்துக்கு பிஸ்கோத் என பெயரிடப்பட்டுள்ளது. ஆர். கன்னண் இயக்கும் இத்திரைப்படத்துக்கு தரன் இசையமைக்கிறார். ஏ 1 படத்தில் நடித்த தாரா அலிஷா பெரி இதில் கதாநாயகியாக நடிக்கிறார். நகைச்சுவை கலந்த ரொமான்ஸ் திரைப்படமாக இது உருவாகிறது.

Entertainment sub editor