'ஏ1' படத்துக்கு பிறகு சந்தானம், யோகிபாபுவுடன் இணைந்து நடித்துள்ள 'டகால்டி' திரைப்படம் வருகிற ஜனவரி 31 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் டீஸர் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த படத்தில் ரித்திகா சென், யோகி பாபு, ராதா ரவி, நடிக்க, விஜய் ஆனந்த் இயக்க, விஜய் நாராயண் இசையமைக்கித்துள்ளார். இந்த படத்துக்கு ஹேண்ட் மேட் மூவிஸ் மற்றும் 18 ரீல்ஸ் நிறுவனங்கள் இணைந்து இந்த படத்தை தயாரித்துள்ளது.
இந்நிலையில் சந்தானம் நடித்து உருவாகியுள்ள 'சர்வர் சுந்தரம்' திரைப்படமும் ஜனவரி 31 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. இதனால் ஒரே நாளில் இரண்டு படங்களும் மோதிக்கொள்ளும் நிலை இருந்தது. இதனையடுத்து தற்போது கிடைத்த தகவலின் படி இந்த படம் வருகிற பிப்ரவரி 14 ஆம் தேதி லவ்வர்ஸ் டே ஸ்பெஷலாக வெளியாகவுள்ளதாம்.
சர்வர் சுந்தரம் படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, பிகே வர்மா ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்தில் சந்தானத்துக்கு ஜோடியாக வைபவி சாண்டில்யா நடித்துள்ளார். பால்கி இந்த படத்தை இயக்கியுள்ளார்.