சந்தானம் நடிப்பில் கடைசியாக வெளியான ஏ1 திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தை அறிமுக இயக்குநர் ஜானசன் இயக்கியிருந்தார். இந்த படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தார்.

இதனையடுத்து சந்தானம் டகால்டி, டிக்கிலோனா உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் அவர் நடிப்பில் நீண்ட காலம் தயாரிப்பில் இருந்த படம் சர்வர் சுந்தரம். இந்த படத்தை பால்கி இயக்கியுள்ளார்.
இந்த படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, பிகே வர்மா ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்தில் சந்தானத்துக்கு ஜோடியாக வைபவி சாண்டில்யா நடித்துள்ளார். இந்த படம் வருகிற ஜனவரி 31 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
இந்நிலையில் இந்த படத்தில் இருந்து சந்தானத்தின் பிறந்த நாள் ஸ்பெஷலாக புரோ வீடியோ சாங் தற்போது வெளியாகியுள்ளது. விவேக் எழுதியுள்ள இந்த பாடலை இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனே பாடியுள்ளார்.
சந்தானத்தின் பிறந்த நாள் ஸ்பெஷலாக வெளியான BRO வீடியோ சாங் இதோ ! வீடியோ