பிரபல சீரியல் நடிகை அபி நவ்யா வளைகாப்பு போட்டோ ஷூட் புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.

Also Read | "பிரம்மன் படைச்சதுல ஒன்னு மட்டும் ரொம்ப அழகு" - காஜல் அகர்வால் வெளியிட்ட வைரல் PHOTOS!
சன் டிவி சேனலில் ஒளிபரப்பாகும் கயல் மெகா தொடரில் நடித்து வந்தவர் அபி நவ்யா. பிரபல செய்தி சேனல்களில் செய்தி வாசிப்பாளராக இருந்து சின்னத்திரை நடிகையாக பிரபலமானவர்.
நடிகை அபிநவ்யா, சித்திரம் பேசுதடி, கண்மணி, பிரியமானவள், சிவா மனசுல சக்தி ஆகிய சில தொடர்களில் நடித்துள்ளார்.
சன் டிவியில் ஒளிப்பரப்பான பிரியமானவள் தொடரில் ஸ்வாதியாகவும், கண்மணி தொடரில் சினேகாவாகவும் நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர்.
இவருக்கும் சீரியல் நடிகர் தீபக் குமாருக்கும் கடந்த ஆண்டு மாங்காடு கோயிலில் திருமணம் நடைப்பெற்றது. நடிகர் தீபக், டிக்டொக் வீடியோக்கள் மூலம் பிரபலமானார். பின்னர் கலர்ஸ் சேனலில் ஒளிபரப்பான திருமணம் சீரியலில் நவீன் என்ற கதாப்பாத்திரத்தில் நடித்து பிரபலமானவர். என்றென்றும் புன்னகை, ஈரமான ரோஜாவே -2 சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் இவருக்கு அடையாளத்தை பெற்றுத் தந்தது.
சமீபத்தில் அபி நவ்யா நிறைமாத கர்ப்பத்துடன் போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டிருந்தார். மேலும் குழந்தை பிறப்பை எதிர்நோக்கி இருப்பதாகவும் கூறி இருந்தார்.
இந்நிலையில் நடிகை அபி நவ்யாவுக்கு சென்னையில் உள்ள பிரபல நட்சத்திர விடுதியில் வளைகாப்பு விழா நடந்துள்ளது. இது தொடர்பான புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகை அபி நவ்யா பகிர்ந்துள்ளார். மேலும் "பிறக்கும் குழந்தை ஆணா பெண்ணா என்பது முக்கியமில்லை" எனவும் பதிவிட்டுள்ளார்.
Also Read | 'வாரிசு' படத்தில் குஷ்பு ரோல் இது தான்..! அவரே சொன்ன EXCLUSIVE தகவல்!