www.garudabazaar.com

புதிய கார் வாங்கிய ‘செவ்வந்தி’ சீரியல் நாயகி திவ்யா ஸ்ரீதர்..! பெற்றோருடன் நெகிழ்ச்சி வீடியோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமடைந்தவர்  "கேளடி கண்மணி" தொடர் மூலம் அறிமுகம் ஆன நடிகை திவ்யா ஸ்ரீதர்.

sevvanthi serial actress Divya Sridhar bought new car

சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த இந்த தொடர், மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து திவ்யா ஸ்ரீதர் நடித்த "மகராசி" தொடர், ரசிகர்கள் மத்தியில் அவரை பிரபலம் ஆக்கியது. பழம்பெரும் நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரனின் பேரனான SSR ஆர்யன் நாயகனாக நடிக்கும் இந்த தொடர் சீரியல் பார்வையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.

இந்த சீரியலில் நாயகியாக நடித்துவந்த திவ்யா ஸ்ரீதர் பின்னர், அதில் இருந்து விலகி, சன் டிவி "செவ்வந்தி" தொடரில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். குறுகிய காலத்திலேயே பார்வையாளர்கள் பலரது கவனத்தையும் "செவ்வந்தி" சீரியல் ஈர்த்திருந்தது.

இதனைத் தொடர்ந்து பிரபல சீரியல் நடிகரும், "கேளடி கண்மணி" தொடரில் தன்னுடன் இணைந்து நடித்திருந்தவருமான அர்ணவை திருமணம் செய்து கொண்ட திவ்யா ஸ்ரீதர் குழந்தைக்கு தாயாகவும் ஆனார். ஆனால் இதனிடையே அர்ணவ் - திவ்யா ஸ்ரீதர் இருவருக்குமான பிரச்சனைகள் வெடித்தன. இது தொடர்பான வழக்கு இவர்களுக்கிடையில் நிலவி வரும் நிலையில், தற்போது  ஐந்து மாத கர்ப்பிணியாக இருக்கும் நடிகை திவ்யா ஸ்ரீதரின் வீட்டுக்கு செவ்வந்தி சீரியல் படக்குழுவினர், அவரது இல்லத்திலேயே வைத்து வளைகாப்பு  நடத்தினர்.

இந்நிலையில் நடிகை திவ்யா ஸ்ரீதர், புதிய கார் ஒன்றை வாங்கியுள்ளதாக குறிப்பிட்டு தம் இன்ஸ்டாகிராமில் வீடியோ பதிவிட்டதுடன், "புதிய ஒன்றை தொடங்கும்போது பெரிய நம்பிக்கை கிடைக்கிறது.

எதுவும் சாத்தியமே" என பதிவிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய இணைப்புகள்

sevvanthi serial actress Divya Sridhar bought new car

People looking for online information on Divya arnav, Divya Shridhar, Divya sreedhar, Divya Sridhar, Divya sridhar baby shower will find this news story useful.