தளபதி 63 : சூடு பிடிக்கும் போட்டி - என்ன தெரியுமா ?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

அட்லி இயக்கத்தில் விஜய், நயன்தாரா, கதிர், ஜாக்கி ஷெராஃப், விவேக், யோகி பாபு, டேனியல் பாலாஜி உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி வரும் படம் தளபதி 63. இந்த படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

Screen Scene and KJR studios are trying to Get Tamilnadu Rights of Vijay, Atlee's Thalapathy63

ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்துவரும் இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்நிலையில் இந்த படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை பெற இரண்டு நிறுவனங்களிடையே கடும் போட்டி நிலவுவதாக கூறப்படுகிறது.

இந்த படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை ஏற்கனவே ஸ்கிரீன் சீன் நிறுவனம் வாங்கி விட்டதாக செய்திகள் வெளியானது. எங்களுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இன்னும் அந்த நிறுவனம் வெளியீட்டு உரிமையை பெறுவது குறித்து இறுதிக்கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றுவருகிறதாம்.

மேலும் இந்த படத்தின் தமிழக உரிமையை பெற ஸ்கிரீன் சீன் மற்றும் கேஜேஆர் நிறுவனங்களிடையே போட்டி நிலவுகிறதாம். தளபதி 63 திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு வெளியாகும் என தெரிகிறது.

இதனைத் தொடர்ந்து விஜய் நடிக்கும் தளபதி 64 திரைப்படத்தை 'மாநகரம்', 'கைதி' படங்களின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.