"ஆட்டோக்காரனின் தோழன் "- ஆட்டோ ஓட்டுநர்களை கௌரவித்த விஜய்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் வருடா வருடம் ரசிகர்களை நேரில் சந்திக்கும் வழக்கத்தை வைத்துள்ளார். கடந்த ஆண்டு கேரளாவில் உள்ள தனது ரசிகர்களை நேரில் சந்தித்து புகைப்படம் எடுத்தார்.

Thalapathy Vijay's act of kindness for Auto drivers

ஆண்டு தோறும் உழைப்பாளர் தினமான  மே தினத்தை முன்னிட்டு, தளபதி விஜய் அவர்கள் தொழிலாளர் தோழர்களுக்கு தனது சொந்த செலவில்  விருந்தளித்து பரிசு பொருட்கள் தருவது வழக்கம் ! இவ்வாண்டு தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டமையால், இவ்வாண்டுக்கான விழா, இன்று தளபதி விஜய் மக்கள்  இயக்கத்தின் தலைமை அலுவலகத்தில் மே தின விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. தளபதி விஜய் அவர்கள் படப்பிடிப்பில்  உள்ளதால், அவரது சார்பாக,  தளபதி விஜய் அவர்களின் உத்தரவின் பேரில்  விழாவினை  மாநில பொறுப்பாளர் புஸ்ஸி N ஆனந்த் அவர்கள் தலைமையேற்று  ஆட்டோ ஓட்டும் தொழிலாளர்களுக்கு  பரிசுகள் மற்றும் மதிய உணவை  வழங்கினார்.

Tags : Vijay