இந்தாண்டு வெளிவர உள்ள படங்களில் பெரிதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படம் என் ஜி கே சூர்யா நடிப்பில் செல்வராகவனின் இயக்கத்தில் தயாராகி உள்ள இந்த படம் மே 31ஆம் தேதி வெளியாகவுள்ளது.யுவன் ஷங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

ட்ரீம் வாரியர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரபு இந்த படத்தை தயாரித்துள்ளார்.சூர்யாவுக்கு ஜோடியாக சாய்பல்லவி , ரகுல் ப்ரீத் சிங் இருவரும் நடிக்கின்றனர்.இந்த படத்திற்கு சென்சார் போர்டு யு சான்றிதழ் வழங்கியுள்ளது.இந்த படத்தின் ட்ரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.
தற்போது இந்த படத்தின் சாட்டிலைட் உரிமையை பிரபல தொலைக்காட்சி நிறுவனமான விஜய் டிவி நிறுவனம் வாங்கியுள்ளது.படத்தின் டிஜிட்டல் உரிமையை அமேசான் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.இந்த அறிவிப்பை படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.
#NGK Satellite & Digital rights with, @vijaytelevision | @PrimeVideoIN pic.twitter.com/dgXMbDtXRT
— DreamWarriorPictures (@DreamWarriorpic) May 26, 2019