போலீஸ் டூ பாக்ஸர் - ஃபிட்னஸில் வியக்க வைக்கும் அருண் விஜய்யின் நியூ வீடியோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் அருண் விஜய் நடிப்பில் உருவாகி வரும் ‘பாக்ஸர்’ திரைப்படத்திற்காக அவர் எடுத்துக் கொள்ளும் பயிற்சிகள் பற்றிய வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

Boxer-Arun Vijay shares motivational martial arts training video for his fans

மகிழ்திருமேனி இயக்கத்தில் அருண் விஜய் நடித்த ‘தடம்’ திரைப்படம் பிளாக் பஸ்டர் ஹிட்டாக அமைந்தது. அதைத் தொடர்ந்து அறிமுக இயக்குநர் விவேக் இயக்கத்தில் ‘பாக்ஸர்’ என்ற படத்தில் நடிக்கவிருக்கிறார்.

எட்செட்ரா என்டெர்டெயின்மென்ட் சார்பில் வி.மதியழகன் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். குத்துச்சண்டை வீரராக அருண் விஜய் நடிக்கும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக ‘இறுதிச்சுற்று’ நாயகி ரித்திகா சிங் நடிக்கிறார். இப்படத்தின் ஷூட்டிங் பணிகள் வரும் ஜூன் மாதம் தொடங்கவிருக்கும் நிலையில், நடிகர் அருண் விஜய் ஒரு பாக்ஸராக தனது உடலை தயார் செய்து வருகிறார். அதற்காக வியட்நாமில் தற்கப்பு கலைகளை கற்று வருகிறார்.

சூர்யா நடித்த ‘7ஆம் அறிவு’, ‘இரும்பு குதிரை’ உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்த தற்காப்பு கலைஞரும் நடிகருமான Johnny Tri-Nguyen இடம் நடிகர் அருண் விஜய் பயிற்சி பெற்று வருகிறார். தனது பயிற்சியின் போது எடுத்த வீடியோ ஒன்றை அருண் விஜய் தனது ரசிகர்களுக்காக பகிர்ந்துள்ளார். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

இந்த படம் மட்டுமல்லாமல் ‘மூடர் கூடம்’ நவீன் இயக்கிவரும் ‘அக்னி சிறகுகள்’ திரைப்படத்தில் விஜய் ஆண்டனியுடன் நடிக்கிறார். பாகுபலி நாயகன் பிரபாஸ் நடித்து வரும் ‘சாஹோ’ திரைப்படத்திலும் நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் உருவாகியுள்ள ‘சாஹோ’ திரைப்படம் வரும் ஆகஸ்ட்.15ம் தேதி ரிலீசாகவுள்ளது.