www.garudabazaar.com

புத்தாண்டு ஸ்பெஷலாக நண்பர் விஜயகாந்த்-ஐ பாக்க ஓடி வந்த சத்யராஜ்.. மனம் நெகிழ வைத்த சம்பவம்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் சினிமாவில் முக்கிய நடிகர்களில் ஒருவராக வலம் வந்தவர் விஜயகாந்த். இவர் 2005 ஆம் ஆண்டு தேசிய முற்போக்கு திராவிடக் கழகம் என்ற பெயரில் புதிய அரசியல் கட்சி ஒன்றைத் தொடங்கினார். 2006 ஆம் ஆண்டு தமிழ்நாடு மாநில சட்டமன்றத் தேர்தலில், விருத்தாச்சலம் தொகுதியிலிருந்து வெற்றி பெற்று தமிழக சட்டபேரவை உறுப்பினராக பணியாற்றினார். அதன் பின்னர் 2011 ஆம் ஆண்டு ரிஷிவந்தியம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அந்த காலகட்டத்தில் இவருடைய தேமுதிக, தமிழக எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற்றது குறிப்பிடத்தக்கது.

Sathyaraj met vijayakanth on behalf of new year occasion

Also Read | "விக்ரமன் கூட சண்ட போடாத".. வெளியேறிய நேரத்திலும் அசிம்-க்கு மணிகண்டா கொடுத்த அட்வைஸ்!!

கடந்த 2016 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு விஜயகாந்தின் உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதனையடுத்து வெளிநாட்டுக்கு சென்று சிகிச்சை எடுத்துக்கொண்டு சென்னை திரும்பினார். அதன்பிறகு முக்கிய நிகழ்வுகளில் மட்டும் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை சந்திப்பதை வழக்கமாக கொண்டிருக்கிறார் விஜயகாந்த்.

அந்த வகையில், புத்தாண்டு தினத்தை முன்னிட்டு நேற்று சென்னை கோயம்பேட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் தொண்டர்களை சந்தித்தார் விஜயகாந்த். அலுவலகத்தின் முகப்பு பகுதியில் அமர்ந்து, தொண்டர்களை பார்த்து கையசைத்த விஜயகாந்த், பின்னர் கைகூப்பி அனைவருக்கும் வணக்கம் தெரிவித்தார். அப்போது கூடியிருந்த தொண்டர்கள் ஆராவாரம் செய்தனர். அதன் பிறகு, அவரை உள்ளே அழைத்துச் சென்றார் அவரது மகன்.

Sathyaraj met vijayakanth on behalf of new year occasion

முன்னதாக கடந்த ஆகஸ்ட் 25 ஆம் தேதி தனது பிறந்தநாளை முன்னிட்டு தொண்டர்களை சந்தித்தார் விஜயகாந்த். அதன்பிறகு பொது நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்காமல் இருந்த நிலையில், புத்தாண்டு தினத்தை முன்னிட்டு தொண்டர்களை அவர் சந்தித்தது அக்கட்சி தொண்டர்கள் மற்றும் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.

இந்த நிலையில், புத்தாண்டை முன்னிட்டு விஜயகாந்தை அவரது இல்லத்தில் வைத்து நடிகர் சத்யராஜ் சந்தித்துக் கொண்டது தொடர்பான வீடியோக்களும் அதிகம் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் நெருங்கிய நண்பர்களாக இருந்து வருபவர்கள் சத்யராஜ் மற்றும் விஜயகாந்த் ஆகியோர். இருவரும் ஒன்றாக இணைந்து திரைப்படங்களிலும் நிறைய நடித்துள்ள சூழலில், தற்போது புத்தாண்டை முன்னிட்டு விஜயகாந்தை நேரில் வந்து சந்தித்து நலம் விசாரித்துள்ளார் சத்யராஜ்.

Sathyaraj met vijayakanth on behalf of new year occasion

விஜயகாந்திற்கு பொன்னாடை போர்த்தி புத்தாண்டு வாழ்த்துக்களை சத்யராஜ் தெரிவிக்க, இருவரும் வெகுநேரம் பேசிக்கொண்டிருந்தனர். நீண்ட கால நண்பர்கள் இருவரின் சந்திப்பு நடந்துள்ளது தற்போது பார்ப்போர் பலரையும் மனம் கலங்க வைத்துள்ளது.

Also Read | "இந்தா வந்துருச்சுல".. விஐய் நடிப்பில் வாரிசு!.. வெளியான சென்சார் அப்டேட்!!

புத்தாண்டு ஸ்பெஷலாக நண்பர் விஜயகாந்த்-ஐ பாக்க ஓடி வந்த சத்யராஜ்.. மனம் நெகிழ வைத்த சம்பவம் வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Sathyaraj met vijayakanth on behalf of new year occasion

People looking for online information on Sathyaraj, Sathyaraj met vijayakanth, Vijayakanth will find this news story useful.