Rocketry
www.garudabazaar.com

"ரோப் வேணாம்.. டூப் வேணாம்.." Risk-ஆன சண்டை காட்சியில் மாஸ் பண்றாரே விஜயகாந்த்.. வீடியோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் சினிமாவில், ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் ஒரு காலத்தில், அடுத்தடுத்து பல வெற்றிப்  படங்களை கொடுத்து, தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கிக் கொண்டவர் நடிகர் விஜயகாந்த்.

Captain vijayakanth dont use dupe and technique in sethupathi ips

Also Read | Rocketry திரைப்படத்தில் வரும் அப்துல் கலாம் கதாபாத்திரம்.. தியேட்டரில் நெகிழ்ந்து போன ரசிகர்கள்

தொண்ணூறுகளில், ஏராளமான ஹிட் படங்களை கொடுத்து முன்னணி நடிகர்களில் ஒருவராகவும் அவர் வலம் வந்தார்.

அதே போல, விஜயகாந்த் படத்தில் வரும் சண்டைக் காட்சிகளுக்கென்றே பிரத்யேகமான ரசிகர்கள் கூட்டம் உள்ளது.

விஜயகாந்தின் சேதுபதி ஐபிஎஸ்

அந்த வகையில், விஜயகாந்த் படத்தில் வரும் சண்டைக் காட்சி ஒன்று எப்படி படமாக்கப்பட்டது என்பது குறித்த வீடியோ ஒன்று, தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது. நடிகர் விஜயகாந்த் பல படங்களில் போலீஸ் மற்றும் நாட்டுக்காக போராடும் கதாபாத்திரங்கள் உள்ளிட்டவற்றுள் அதிகம் நடித்துள்ளார். அப்படி அவர் நடித்த சேதுபதி ஐபிஎஸ் திரைப்படம், இன்றளவிலும் மக்கள் மத்தியில் நல்ல பேர் பெற்று விளங்கி வருகிறது.

Captain vijayakanth dont use dupe and technique in sethupathi ips

ப்பா, கேப்டன் அர்ப்பணிப்பு சான்ஸே இல்ல..

பி. வாசு இயக்கத்தில், விஜயகாந்த் மற்றும் மீனா ஆகியோர் நடித்திருந்த திரைப்படம், ரிலீஸ் ஆன சமயத்தில் சக்கை போடு போட்டது. இந்த படத்தில் வரும் காட்சி ஒன்றில், பெரிய மணிக்கூண்டு ஒன்றின் முள்ளைப் பிடித்து விஜயகாந்த் திருப்புவது போன்ற காட்சி இடம்பெற்றிருக்கும். சற்று உயரத்தில் இருக்கும் மணிக் கூண்டில், நடிகர் விஜயகாந்த் டூப் மற்றும் ரோப் என எதுவும் இல்லாமல், காட்சி இயல்பாக இருக்க வேண்டும் என்பதற்காக அவரே மெனக்கெட்டு, ரிஸ்க் எடுத்து இந்த காட்சியில் நடித்தது தொடர்பான வீடியோ ஒன்று, தற்போது இணையத்தில் ரவுண்டு அடித்து வருகிறது.

Captain vijayakanth dont use dupe and technique in sethupathi ips

பொதுவாக, நடிகர்கள் பலரும் தங்கள் ரிஸ்க் எடுக்க வேண்டாம் என்பதற்காக, டூப்பை பயன்படுத்துவார்கள். ஆனால், காட்சி மிக தத்ரூபமாக தெரிய வேண்டும் என்பதற்காக, தகுந்த அர்ப்பணிப்புடன் விஜயகாந்த் நடித்த இந்த காட்சி தொடர்பான வீடியோக்கள், தற்போது இணையத்தில் அதிகம் லைக்குகளை அள்ளி வருகிறது.

மேலும், நடிப்பிற்காக கேப்டன் விஜயகாந்தின் அர்ப்பணிப்பை பாராட்டியும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Also Read | "ஆழ்ந்த துக்கம்..".. கணவர் மறைவுக்கு பின் முதல்முறை மனம் திறந்த மீனா

"ரோப் வேணாம்.. டூப் வேணாம்.." RISK-ஆன சண்டை காட்சியில் மாஸ் பண்றாரே விஜயகாந்த்.. வீடியோ வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Captain vijayakanth dont use dupe and technique in sethupathi ips

People looking for online information on Captain Vijayakanth, Sethupathi IPS Movie, Vijayakanth, Vijayakanth Sethupathi IPS will find this news story useful.