www.garudabazaar.com

நயன்தாரா - சத்யராஜ் நடித்த 'CONNECT'.. படத்தை பார்த்து மிரண்டு போன விக்னேஷ் சிவன்! வைரல் பதிவு

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நயன்தாரா நடிப்பில் 2015 ஆம் ஆண்டில் வெளியான 'மாயா' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் அஸ்வின் சரவணன்.

Vignesh Shivan post about Nayanthara Sathyaraj Connect Movie

Also Read | மருதநாயகம் படத்தை நினைவுகூர்ந்து ராணி எலிசபெத்துக்கு இரங்கல்..! கமலின் உருக்கமான பதிவு.!

'மாயா' நயன்தாராவின் 50வது படமாகும், மேலும் இது தமிழ் சினிமாவின் சிறந்த திகில் படங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. 2015-ல் அதிக வசூல் செய்த தமிழ் படங்களில் மாயாவும் ஒன்று. சத்யன் சூர்யன் ஒளிப்பதிவு செய்ய S R பிரபு தயாரித்து இருந்தார்.

பின்னர் 2018 ஆம் ஆண்டு எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் இவர் இயக்கிய படம் ‘இறவாக்காலம்’.  படம் உருவாகி வருகிறது.

Vignesh Shivan post about Nayanthara Sathyaraj Connect Movie

அதன் பிறகு 2019 ஆம் ஆண்டு டாப்சி நடிப்பில் கேம் ஓவர் படத்தை இயக்கினார்.இந்தப் படத்தில், மர்மமான ஊடுருவல்காரர்களிடமிருந்து தனது வீட்டைப் பாதுகாக்கும் PTSD உடைய பெண்ணாக டாப்ஸி நடித்திருப்பார். அஸ்வின் சரவணன் இயக்கிய இந்த சைக்காலஜிக்கல் த்ரில்லர் படத்தை YNOT ஸ்டுடியோஸ் மற்றும் ரிலையன்ஸ் என்டர்டெயின்மென்ட் இணைந்து தயாரித்தது.

Vignesh Shivan post about Nayanthara Sathyaraj Connect Movie

தற்போது அஸ்வின் சரவணன் நயன்தாரா நடிப்பில் கனெக்ட் படத்தை இயக்கி முடித்துள்ளார். இந்த படத்தில் அனுபம் கேர், சத்யராஜ் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு பிரித்வி சந்திரசேகர் இசையமைக்கிறார்.

இந்நிலையில் இந்த படத்தின் முதல் பிரதியை பார்த்து விட்டு இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், "ஒரு அசாதாரண திகில் திரைப்படத்தை உருவாக்கியதற்கு நன்றி அஸ்வின் சரவணன்!!! நீங்கள் அதில் வல்லவர் என்று எங்களுக்குத் தெரியும் :) ஆனால் நாங்கள் எதிர்பார்த்ததை விட எங்களைப் ஆச்சரியப்படுத்திவிட்டீர்கள்.

Vignesh Shivan post about Nayanthara Sathyaraj Connect Movie

லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா, சத்யராஜ் சார் & அனுபம் கேர் மற்றும் நடிகர்கள் அனைவரின்  நடிப்பும் சிறப்பானது.

முதல் பிரதியைப் பார்த்ததில் மகிழ்ச்சி. இதை எங்கள் ரவுடி பிக்சர்ஸ் பேனரில் தயாரித்ததில் மிக்க மகிழ்ச்சி.

Connect  franchise இந்த படம் முதல் தொடங்கும் டீஸர் மற்றும் பிற அப்டேட்டுகள் மிக விரைவில்" என விக்னேஷ் சிவன் கூறியுள்ளார்.

 

Also Read | போடு.! விஜய் & இவருடைய காமெடி காம்போ..?. தளபதி 67-ல் இணைந்த பிரபல நடிகர்.!

தொடர்புடைய இணைப்புகள்

Vignesh Shivan post about Nayanthara Sathyaraj Connect Movie

People looking for online information on Connect Movie, Nayanthara, Nayanthara Connect Movie, Sathyaraj, Vignesh shivan will find this news story useful.