www.garudabazaar.com

"வானம் கூட எல்லை இல்லை".. மகள் பிறந்தாளுக்கு நடிகை மீனா நெகிழ்ச்சியான பதிவு!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை மீனா, தனது மகள் நைனிகா பிறந்தநாளுக்கு வாழ்த்து கூறி பதிவிட்டுள்ளார்.

Meena Wishes Her Daughter Nainika Birthday with Tour Video

Also Read | இந்தா வந்துருச்சுல.. பிரபல TV சேனலில் ஒளிபரப்பாகும் 'பொன்னியின் செல்வன்'.. டைம் எப்போ?

90-களில் தமிழ் & தென்னிந்திய சினிமாவில் கதாநாயகியாக வலம் வந்தவர் நடிகை மீனா.

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் மீனா நடித்துள்ளார்.

Meena Wishes Her Daughter Nainika Birthday with Tour Video

குழந்தை நட்சத்திரமாகவும் & கதாநாயகியாகவும்  ரஜினி, கமல், அஜித், விஜய், விஜயகாந்த், பிரபு, சத்யராஜ்  என முன்னணி நடிகர்களுடன் ஒரு காட்சியிலாவது இணைந்து மீனா நடித்திருக்கிறார்.

Meena Wishes Her Daughter Nainika Birthday with Tour Video

நடிகை மீனாவின் மகள் நைனிகா, அட்லி இயக்கிய தெறி, அரவிந்த்சாமி நடித்த பாஸ்கர் தி ராஸ்கல் ஆகிய திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து இருக்கிறார்.

தற்போதும், தொடர்ந்து திரைப்படங்களில் கவனம் செலுத்தி வந்த மீனா, கடைசியாக ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த அண்ணாத்த திரைப்படத்தில் மீனா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

Meena Wishes Her Daughter Nainika Birthday with Tour Video

சமீபத்தில்  தனது 46வது பிறந்தநாளை கேக் வெட்டி நடிகை மீனா கொண்டாடினார். சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகை மீனா தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிறிஸ்துமஸ் & புத்தாண்டு பண்டிகையை பிரான்ஸ் நாட்டின் லயோன் நகரில் கொண்டாடிய வீடியோ & புகைப்படங்களை வெளியிட்டு இருந்தார். இந்நிலையில் மீனாவின் மகள் நைனிகா, நேற்று தனது பிறந்தநாளை கொண்டாடினார். மகள் நைனிகாவின் பிறந்தநாளை முன்னிட்டு தனது சமூக வலைத்தள பக்கத்தில் நடிகை மீனா, "உயர உயர பற அன்பு மகளே.. உனக்கு வானம் கூட எல்லை இல்லை. சூரிய கதிர்கள் போல எப்பொழுதும் பிரகாசமாக உன்னை சுற்றி இருப்பவர்களுக்கு வெளிச்சம் கொடு". என நடிகை மீனா தனது மகளுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார்.

Also Read | LOVE TODAY படத்தின் இந்தி ரீமேக் ரைட்ஸ்.. தயாரிப்பாளர் போனி கபூர் போட்ட பரபர ட்வீட்!

"வானம் கூட எல்லை இல்லை".. மகள் பிறந்தாளுக்கு நடிகை மீனா நெகிழ்ச்சியான பதிவு! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Meena Wishes Her Daughter Nainika Birthday with Tour Video

People looking for online information on Meena, Meena Wishes Her Daughter Birthday, Nainika Birthday will find this news story useful.