www.garudabazaar.com

மகன் விஜய பிரபாகரனுக்கு இனிப்பு ஊட்டிய கேப்டன் விஜயகாந்த்.. வைரலாகும் புதிய ஃபோட்டோஸ்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கேப்டன் விஜயகாந்த்தின் சமீபத்திய புகைப்படத்தை அவருடைய மகன் விஜய. பிரபாகரன் வெளியிட்டுள்ளார்.

Captain Vijayakanth with His family latest viral photos

Also Read | RJ பாலாஜி - ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் த்ரில்லர் படம்... போஸ்டருடன் வெளியான ரிலீஸ் அப்டேட்!

நடிகரும்,  முன்னாள் சட்டசபை எதிர்க்கட்சித்தலைவருமான நடிகர் விஜயகாந்த் தேமுதிக கட்சியின் நிறுவன தலைவராகவும் உள்ளார்.

சில ஆண்டுகளுக்கு முன்பு 2014ல் உடல் நலக்குறைவால் நடிகர் விஜயகாந்த் அதற்காக சிங்கப்பூரில் சிகிச்சை எடுத்துக்கொண்டார். சிங்கப்பூரில் உள்ள குயின் எலிசபெத் மருத்துவமனையில் அவருக்காக பிரத்தியேக சிகிச்சை அளிக்கப்பட்டது.

Captain Vijayakanth with His family latest viral photos

பின்னர் 2017-2018ல் மீண்டும் சென்னை, சிங்கப்பூர், அமெரிக்காவில் தொடர் சிகிச்சை எடுத்துக்கொண்டு நலமடைநதார். இந்த சிகிச்சையின் அடுத்த கட்டமாக கடந்த ஆண்டு ஆண்டு ஆகஸ்ட் மாதம் விஜயகாந்த் துபாய் வழியாக அமெரிக்கா சென்றார். அமெரிக்காவில் உள்ள மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று மீண்டும் தமிழகம் வந்தார். சமீபத்தில் கேப்டன் விஜயகாந்த், நீரிழிவு சிகிச்சை எடுத்துக்கொண்டது குறிப்பிடத்தக்கது.

Captain Vijayakanth with His family latest viral photos

தீவிர அரசியல் மற்றும் உடல்நிலை காரணமாக 2010க்கு பின் சினிமாவில் நடிக்காமல் இருந்தார். கடைசியாக சகாப்தம் படத்தில் கேமியோ ரோலில் நடித்தார். கதாநாயகனாகவும் இயக்குனராகவும் கடைசியாக 2010ல் விருதகிரி படத்தில் காணப்பட்டார்.

1990-ல் பிரேமலதாவை மணந்த இவருக்கு விஜய் பிரபாகர், சண்முக பாண்டியன் என இரு மகன்கள் உள்ளனர்.

Captain Vijayakanth with His family latest viral photos

இந்நிலையில் விஜய பிரபாகர் நேற்று தனது பிறந்தநாளை கொண்டாடினார். பிறந்தநாளை கேக் வெட்டி, பொதுமக்களுக்கு உணவளித்து கொண்டாடினர். மேலும் குடும்பத்துடன் பிறந்தநாள் கொண்டாடிய புகைப்படத்தையும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

கேப்டன் விஜயகாந்த், பிரேமலதா, சண்முக பாண்டியனும் இந்த புகைப்படத்தில் உள்ளனர். கேப்டன் விஜயகாந்த், தனது மகன் விஜய பிரபாகரனுக்கு இனிப்பு ஊட்டும் தருணமும் புகைப்படத்தில் பதிவாகியுள்ளது.

Also Read | பிரபல இயக்குனர் குறித்த சர்ச்சையான பேச்சு.. வருத்தம் தெரிவித்து மம்மூட்டி பதிவு!

தொடர்புடைய இணைப்புகள்

Captain Vijayakanth with His family latest viral photos

People looking for online information on Captain Vijayakanth, Captain Vijayakanth with His family photos, Vijayakanth will find this news story useful.