Pattamboochi

‘மாரி-ல்லாம் Part 2 வருது.. பவர் பாண்டிக்கு எடுக்க கூடாதா.?’.. வீட்ல விசேஷம்.. சத்யராஜ் அல்டிமேட்.!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஆர்.ஜே.பாலாஜி, அபர்ணா பாலமுரளி, சத்யராஜ், ஊர்வசி மற்றும் பலர் நடிப்பில் உருவான திரைப்படம் வீட்ல விசேஷம்.  Badhaai Ho என்கிற இந்தி படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக் படமான இந்த படத்தை ஆர்.ஜே பாலாஜி மற்றும் NJ சரவணன் இணைந்து இயக்கியுள்ளனர்.

Maari2 Power Pandi Sathyaraj Veetla Visesham

Also Read | விஜய் நடிக்கும் வாரிசு படத்தில் இணைந்த பிரபல 80s ஹீரோயின்! இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே

தோளுக்கு மேல் வளர்ந்த 2 மகன்களை வைத்துக்கொண்டு முதுமையில் கர்ப்பம் தரிக்கும் பெண், ஆனால் அதற்கான கிண்டல், கேலி, பழி எதையும் அந்த தாம்பத்திய வாழ்வில் பங்குபெற்ற கணவன் மீது விழாமல், மனைவியை மட்டுமே அவதூறு பேசுகிறது சுற்றமும், சமூகமும். இதை நகைச்சுவை, செண்டிமெண்ட் கலந்து சொல்லியிருக்கும் படம் வீட்ல விசேஷம்.

Maari2 Power Pandi Sathyaraj Veetla Visesham

இந்த படத்தில் சத்யராஜ் தன் மனைவி ஊர்வசி கர்ப்பம் தரித்த பிறகு, வயதான காலத்திலும் இளமை துள்ளலோடு உற்சாகமாகவும் மனைவி மீது காதலுடனும் இருக்க ஆரம்பிப்பார். அப்போது ஒரு காட்சியில் பவர் பாண்டி படத்தில் வரும் வெண்பணி மலரே பாடல் ஓடும். அதை பார்த்து எக்ஸைட் ஆகும் சத்யராஜ், “அடடா.. பவர் பாண்டி படத்துல ராஜ்கிரணும் ரேவதியும் சேர்ந்த பிறகு என்னாச்சுன்னு ஒரு பார்ட் -2 படம் எடுக்கலாம்ல? மாரி படத்துக்கெல்லாம் பார்ட் 2 எடுக்குறாங்க..” என்று சத்யராஜ் அனத்துவார்.

Maari2 Power Pandi Sathyaraj Veetla Visesham

வயது முதிர்ச்சியிலும் மனைவியிடம் மாறாத காதலுடன் இருக்கும் சத்யராஜ் கேரக்டர், பவர் பாண்டி படத்தில் வரும் ராஜ்கிரண் - ரேவதியின் முதிர்ந்த காதலை பார்த்ததும் பரவசமாகி, இத்தகைய வசனத்தை ஆதங்கமாய் பேசுவதாய்  இந்த காட்சி அமைந்திருக்கும். ஜூன் 17-ஆம் தேதி முதல் திரையரங்குகளில் ஒளிபரப்பாகி வரும் இந்த திரைப்படம் காமெடி மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களுடன் குடும்பத்திரைப்படமாக அனைத்து தரப்பு பார்வையாளர்களையும் வெகுவாக கவர்ந்துள்ளது.

Maari2 Power Pandi Sathyaraj Veetla Visesham

Also Read | விஜய் நடிக்கும் 'வாரிசு' படத்தின் வேற மாரி 2nd LOOK போஸ்டர்.. எப்படி இருக்கு?

Maari2 Power Pandi Sathyaraj Veetla Visesham

People looking for online information on Maari2, Power Pandi, Sathyaraj Veetla Visesham will find this news story useful.