பிக்பாஸ் வீட்டை விட்டு அதிரடியாக வெளியேற்றப்பட்ட சரவணன். காரணம் என்ன தெரியுமா?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவியில் கமல் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் எப்பொழுதும் ஏதாவது ஒரு பிரச்சனையினால் பிக்பாஸ் வீடு பரபரப்பாகிக்கொண்டே இருக்கிறது.

Saravanan Evicted Kavin Losliya Sandy and Kamal Haasan's Bigg Boss 3

கவின், லாஸ்லியா, சாக்ஷி இடையேயான முக்கோண காதல் ஒரு புறம், மீரா மிதுனின் அட்ராசிட்டி ஒரு புறம் என பிரச்சனைகளுக்கு மட்டும் பஞ்சமே இல்லை. மேலும் போன வாரம் சேரன் - சரவணன் மோதல், இந்த வாரம் அபிராமி முகேனுடன் எழுந்த பிரச்சனை என சரவெடியாக வெடிக்கிறது.

மேலும் சேரன் - மீரா விவகாரம் ஒருபுறம் பெரும் அதிர்வலைகளை பிக்பாஸ் வீட்டில் ஏற்படுத்தியிருந்தது. அப்போது சேரனுக்கு ஆதரவாக பேசிய கமல் பேருந்துகளில் கூட்ட நெரிசலில் இதுவெல்லாம் சகஜம். ஒரு சிலர் பெண்களிடம் தவறாக நடந்துகொள்ளவே வருவார்கள் என்று ஆறுதல் கூறினார்.

அப்போது எழுந்த சரவணன் நானும் அப்படி இருக்கேன் சார் என்று பேச விஷயம் பூதாகரமானது. அவர் அப்படி பேசியதற்கு மறுநாள் மன்னிப்பும் கேட்டார். இந்நிலையில் அவரை கன்ஃபெஷன் ரூமிற்கு அழைத்த பிக்பாஸ், பெண்கள் விஷயத்தில் நீங்கள் பேசியது தவறு. அதை ஒரு போதும் மன்னிக்காது. அதனால் இந்த பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்படுகிறீர்கள் என்று பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றியது.