'சூர்யா சாரோட மைண்ட் வாய்ஸ்: இது நம்ம லிஸ்ட்லயே இல்லயே?!'' - பிரபல நடிகர் காமெடி

முகப்பு > சினிமா செய்திகள்

By |

லைக்கா புரொடக்ஷன் சார்பாக சுபாஷ்கரன் தயாரிப்பில் சூர்யா ஹீரோவாக நடித்து கடந்த செப்டம்பர் 20 ஆம் தேதி வெளியான படம் 'காப்பான்'. இந்த படத்தை கே.வி.ஆனந்த் இயக்கியிருந்தார்.

Sathish Comments about Suriya, Arya, Sayyeshaa's Kaappaan

ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ள இந்த படத்துக்கு எம்.எஸ்.பிரபு ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்தில் மோகன்லால், ஆர்யா, சாயிஷா, பொமன் இரானி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.

இந்த படத்தின் இரண்டாவது டெலிட்டட் சீன் வெளியாகியிருந்தது. அதில், சூர்யாவை வெறுப்பேற்றுவதற்காக ஆர்யா, சாயிஷாவிடம் காதல் சொல்வது போன்று இடம் பெற்றிருக்கும். இதுகுறித்து நடிகர் சதிஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் அந்த புகைப்படத்தை பகிர்ந்து 'சூர்யா சாரோட மைண்ட் வாய்ஸ்: இது நம்ம லிஸ்ட்லயே இல்லயே?!'' என்பது போல குறிப்பிட்டுள்ளார்.