Breaking: சூர்யா - டைரக்டர் ஹரி படத்தில் முதன்முறையாக இணையும் பிரபல மியூசிக் டைரக்டர்
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Dec 20, 2019 03:09 PM
'காப்பான்' படத்துக்கு பிறகு சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள படம் 'சூரரைப் போற்று'. இந்த படத்தை 'இறுதிச்சுற்று' பட இயக்குநர் சுதா கொங்கரா இயக்க, ஜீவி பிரகாஷ் இந்த படத்துக்கு இசையமைத்துள்ளார்.

இந்த படத்தை குனீத் மோங்காவுடன் இணைந்து சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்தில் சர்வம் தாளமயம் படத்தில் நடித்த அபர்ணா முரளி, கருணாஸ், ஊர்வசி, ஜாக்கி ஷெராஃப், மோகன் பாபு உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
இந்த படத்தின் டீஸர் பொங்கலை முன்னிட்டு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இயக்குநர் ஹரி இயக்கத்தில் சூர்யா ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார். இந்த படத்துக்கு டி.இமான் இசையமைக்கவிருக்கிறார். சூர்யா மற்றும் டைரக்டர் ஹரியின் படத்துக்கு டி.இமான் இசையமைப்பது இதுவே முதன்முறை.