நடிகர் விஜய்யின் 'தளபதி 64'ல் இணைந்த பிரபல டான்ஸ் மாஸ்டர்
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Dec 19, 2019 02:46 PM
'பிகில்' படத்துக்கு கிடைத்த வரவேற்புக்கு பிறகு நடிகர் விஜய் 'தளபதி 64' படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை 'மாநகரம்', 'கைதி', படங்களின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார்.

இந்த படத்தை எக்ஸ்பி ஃபிலிம் கிரியேட்டர்ஸ் சார்பாக சேவியர் பிரிட்டோ தயாரிக்க அனிருத் இந்த படத்துக்கு இசையமைக்கிறார். சத்யன் சூரியன் இந்த படத்துக்கு ஒளிப்பதிவு செய்து வருகிறார்.
இந்த படத்தில் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தனு, அர்ஜூன் தாஸ், ஆண்ட்ரியா என ஒரு பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்து வருகின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது கர்நாடகா மாநிலம் சிவமொகாவில் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்தின் பாடல்காட்சிகள் தற்போது படமாக்கப்பட்டு வருகிறது.
இந்த படத்தில் பிரபல நடன இயக்குநர் சதிஷ் கிருஷ்ணன் இணைந்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், சொல்லிட்டேன், என் உயிர் தளபதிக்கு ஆக்சன் சொலலிட்டேன் என்று தனது மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
Sollittean en Uyir thalabathy ku action sollitean . Moved and feel emotional .
— Sathish krishnan (@dancersatz) December 19, 2019