’4 வேறுபட்ட காதல் கதைகள்!’ - உரிமையை கைப்பற்றிய சூர்யா

முகப்பு > சினிமா செய்திகள்

By |

2014ம் ஆண்டு வெளியான ’பூவரசம் பீப்பீ’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் ஹலீதா ஷமீம். இவர் தனது இரண்டாவது படத்துக்கு ‘சில்லுக் கருப்பட்டி’ என பெயர் சூட்டி உள்ளார்.

Suriya bought the Tamilnadu theatrical release rights for the film Sillu Karupatti. Samudrakani stars as lead.

நகரத்தில் வாழும் 4 காதல் ஜோடிகளுக்கு இடையே நடைபெறும் காதல் கதையை இந்த திரைப்படம் சித்தரிக்கிறது. சமுத்திரக்கனி, சுனைனா, லீலா சேம்சன், பேபி சாரா அர்ஜுன், ’காலா’ மணிகண்டன், நிவேதிதா சதீஷ் என்று இப்பத்தில் பலர் நடிக்கின்றனர்.

இப்படத்தில் 4 வேறுபட்ட கதைகளையும் அபினந்தன் ராமானுஜம், மனோஜ் பரமஹம்சா, விஜய் கார்த்திக் கண்ணன், யாமினி யாக்னமூர்த்தி ஆகிய  நால்வரும் ஒளிப்பதிவு செய்கின்றனர்.

டிவைன் புரடக்‌ஷன்ஸ் தயாரித்துள்ள இப்படத்துக்கு பிரதீப்குமார் இசையமைத்துள்ளார். இத்திரைப்படத்தின் தமிழக திரையரங்கு உரிமையை சூர்யாவின் 2டி எண்டர்டெய்ன்மெண்ட் பெற்றுள்ளது.

Happy to support #SilluKaruppatti https://t.co/EqP7Nuxpvk

— 2D Entertainment (@2D_ENTPVTLTD) December 15, 2019

’4 வேறுபட்ட காதல் கதைகள்!’ - உரிமையை கைப்பற்றிய சூர்யா வீடியோ