வெற்றி மாறன் - தனுஷ் கூட்டணியில் உருவாகியுள்ள அசுரன் படம் எவ்வளவு நேரம் தெரியுமா ?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

வி.கிரியேஷன்ஸ் தயாரிப்பில் கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் தனுஷ் நடித்துள்ள படம் 'அசுரன்'. வெற்றிமாறன் இயக்கியுள்ள இந்த படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இந்த படம் அக்டோபர் 4 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

Dhanush and Vetrimaaran's Asuran's run time is 140 Minutes

எழுத்தாளர் பூமணி எழுதிய வெக்கை என்ற நாவலை அடிப்படையாகக் கொண்டு இந்த படம் உருவாகியுள்ளது. இந்த படத்துக்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்தின் மூலம் பிரபல மலையாள நடிகை மஞ்சு வாரியர் தமிழில் அறிமுகமாகியுள்ளார்.

மேலும் இயக்குநர் பாலாஜி சக்திவேல், பிரகாஷ் ராஜ், கென், டிஜே ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு சென்சாரில் U\A சான்றிதழ் கிடைத்துள்ளது. இந்நிலையில் இந்த படம் 2 மணி நேரம் 20 நிமிடங்கள் ஓடக்கூடியது என்ற தகவல் வெளியாகியுள்ளது.